ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

கடந்த நிதியாண்டை விட ஏர் கார்கோ இயக்கத்தில் 30% உயர்வை கண்ட மும்பை விமான நிலையம்!

கடந்த நிதியாண்டை விட ஏர் கார்கோ இயக்கத்தில் 30% உயர்வை கண்ட மும்பை விமான நிலையம்!

மும்பை விமான நிலையம்

மும்பை விமான நிலையம்

முக்கிய உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் உபகரணங்கள் காலத்தின் தேவையாக இருந்து வருவதால் CSMIA மொத்தம் 397 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை எடுத்து செல்ல உதவியுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் மும்பை விமான நிலையத்தின் சரக்கு போக்குவரத்து இயக்கம் சுமார் 30% வரை உயர்ந்துள்ளது. தொற்றுக்கு பிறகான உலகளாவிய விநியோக சங்கிலி செயல்பாடுகள் சீராக வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் (CSMIA) ஏர் கார்கோ ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (export and import) இயக்கங்களின் அடிப்படையில் 2022-ஆம் நிதியாண்டில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது.

2022-ஆம் நிதியாண்டில் மொத்தம் 5,56,900 மெட்ரிக் டன் சரக்கு மும்பை விமானநிலையத்தில் கையாளப்பட்டுள்ளது. இதில் மொத்த இறக்குமதி சரக்கின் அளவு 2,60,600 மெட்ரிக் டன்கள், மொத்த ஏற்றுமதி சரக்கு 296,300 மெட்ரிக் டன்கள் ஆகும். இந்த அளவை 2021-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 30 சதவீதம் அதிகமாகும். இதில் இன்டர்நேஷ்னல் கார்கோ அளவு 26 சதவீதமும், டொமஸ்டிக் கார்கோ அளவு 40 சதவீதமும் அதிகரித்துள்ளது.

CSMIA வழியாக அதிக இறக்குமதியை கண்டுள்ள முதல் 3 இடங்கள் முறையே சீனா, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆகும். ஏற்றுமதியை பொறுத்த வரை முதன்மையான இடங்களை அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை பெற்றுள்ளன. எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் மற்றும் துருக்கி ஏர்லைன்ஸ் ஆகியவை கடந்த நிதியாண்டில் சர்வதேச அளவில் அதிக சரக்குகளை ஏற்றிச் சென்ற முதல் 3 விமான நிறுவனங்களாக இருந்தன.

மேலும் ஆட்டோ மொபைல்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் பொறியியல் பொருட்கள் ஆகியவை அதிக அளவில் சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. உலகெங்கிலும் உள்ள சரக்கு போக்குவரத்து முழு திறனுடன் தற்போது செயல்படுவதால், CSMIA மொத்த உள்நாட்டு சரக்கு இயக்கத்தை எளிதாக்கும் வகையில் மொத்தம் 76,736 உள்நாட்டு விமானங்களை கையாண்டுள்ளது. இதனிடையே மும்பை விமான நிலையத்தின் விமான சரக்கு முனையம் (air cargo terminal) மூலம் கடந்த நிதியாண்டில் சுமார் 17,570 சர்வதேச விமானங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு பங்களித்து உள்ளன.

மேலும் முக்கிய உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் உபகரணங்கள் காலத்தின் தேவையாக இருந்து வருவதால் CSMIA மொத்தம் 397 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை எடுத்து செல்ல உதவியுள்ளது. சுமார் 58 மில்லியன் டோஸ்கள் 76 சர்வதேச இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 339 மில்லியன் டோஸ்கள் 49 உள்நாட்டு நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. கூடுதலாக 1000 டன் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 50 டன் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள் மற்றும் 150 MT கோவிட் நிவாரண மருந்துகளும் CSMIA-ன் ஏர் கார்கோ டெர்மினலில் வெற்றிகரமாக கையாளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also read... எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் கிடைக்க வாய்ப்பு!

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் காகிதமற்ற மற்றும் தொடர்பு இல்லாத இறக்குமதி நடவடிக்கைக்கு உதவும் வகையிலான D-Cube டெக்னலாஜி மற்றும் நேர குறைப்பு உள்ளிட்ட மேம்பட்ட டெக்னலாஜி சொல்யூஷன்களை ஏற்று செயல்படுத்தி வருவதன் மூலம் தன்னுடைய சரக்கு கையாளும் திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது சத்ரபதி சிவாஜி மஹராஜ் சர்வதேச விமான நிலையம்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Mumbai Airport