ஹோண்டா ஆக்டிவா வாங்க வந்த வாடிக்கையாளரால் திணறிய விற்பனையாளர்

ஹோண்டா ஆக்டிவா

மொத்த பணத்தையும் நேரடியாக செலுத்தத் தயாரான ராகேஷ் அங்கிருந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடையச் செய்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தை வாங்க வந்த வாடிக்கையாளரின் செயலால் விற்பனை நிர்வாகிகள் திணறினர்.

மத்தியபிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் குமார். இவர் தன் பகுதியில் உள்ள ஒரு ஹோண்டா ஷோரூம்-க்கு சென்றார். தீபாவளி பண்டிகையை ஒட்டி ஹோண்டா ஆக்டிவா 125 பைக்கை வாங்க முன்வந்தார். மொத்த பணத்தையும் நேரடியாக செலுத்தத் தயாரான ராகேஷ் அங்கிருந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடையச் செய்தார்.

காரணம், வெறும் 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்களாகவே மொத்தப் பணத்தையும் செலுத்தினார் ராகேஷ். 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹோண்டா ஆக்டிவா பைக்கை வாங்கிய ராகேஷ் சில்லரைகளாகப் பணம் செலுத்தியதால் டீலர்ஷிப் நிர்வாகிகள் சில்லரை மெஷின் உதவி ஏதும் இன்றி கைகளாலே எண்ணத் தொடங்கினர்.

சுமார் 3 மணி நேரம் சில்லரைகளை எண்ணிய நிர்வாகிகள் இறுதியாக ஹோண்டா ஆக்டிவா பைக்கை ராகேஷிடம் டெலிவரி செய்தனர்.

மேலும் பார்க்க: 5 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களைக் களம் இறக்கத் தயார்- ஹூண்டாய் அறிவிப்பு!

ஆழ்துளை கிணறுகள்: சட்ட விதிகள் சொல்வது என்ன?
Published by:Rahini M
First published: