சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் போலீஸ் விசாரணையா?- புது சட்டம் என்ன சொல்கிறது...?

சாலைப் போக்குவரத்துத் துறையைப் பொறுத்தவரையில் மாநில அரசின் உரிமைகளுக்குள் மத்திய அரசு தலையிடாது என்றும் நிதின் கட்காரி கூறினார்.

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் போலீஸ் விசாரணையா?- புது சட்டம் என்ன சொல்கிறது...?
மாதிரிப்படம். (Image: ANI/Twitter)
  • News18
  • Last Updated: July 24, 2019, 5:53 PM IST
  • Share this:
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் தேவையில்லாத பிரச்னைகளையும் போலீஸ் விசாரணையையும் சந்திக்க வேண்டிய சூழல் வரும் என்கிற பொதுக்கருத்து மக்கள் மத்தியில் உள்ளது.

ஆனால், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதால் போலீஸ் விசாரணை இருக்கும் என மக்கள் தயங்கத் தேவையில்லை என விளக்குகிறது புதிய மோட்டார் வாகனச் சட்டம் 2019.

சாலைப் போக்குவரத்தை மேம்படுத்துவதிலும் அதில் உள்ள ஊழல்களை ஒழிப்பதற்கும் தகுந்த சட்ட மாற்றங்கள் உடன் உள்ள மோட்டார் வாகனச் சட்டம் 2019-க்கு நேற்று மக்களவையில் ஒப்புதல் கிடைத்துள்ளது.


புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பொது மக்கள் உதவினால் அந்த ஒரு காரணத்துக்காக எந்தவொரு விசாரணையும் பிரச்னையும் உதவுபவருக்கு வராது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தை விரிவாக எடுத்துரைப்பதன் மூலம் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ பொதுமக்கள் தயங்கமாட்டர் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

மேலும், சாலைப் போக்குவரத்துத் துறையைப் பொறுத்தவரையில் மாநில அரசின் உரிமைகளுக்குள் மத்திய அரசு தலையிடாது என்றும் நிதின் கட்காரி கூறினார். சாலைப் போக்குவரத்தில் விதிமுறைகளுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அபராதம் விதிக்கும் சட்டம், புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவதற்கான சட்டம் என மோட்டார் வாகனச் சட்டத்தில் பல புதிய அம்சங்கள் மேம்படுத்தப்பட்டும் இணைக்கப்பட்டும் உள்ளது.

மேலும் பார்க்க: ஹூண்டாய் கோனாவை கொடியசைத்துத் துவக்கி வைத்த தமிழக முதல்வர்..!
First published: July 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading