லைசென்ஸ் இல்லையா ₹5 ஆயிரம்... குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ₹10 ஆயிரம் அபராதம்!

சிறுவர்கள் வாகனம் இயக்கினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் வாகன உரிமையும் பறிக்கப்படும். கூடுதலாக 3 ஆண்டு சிறைத்தண்டைனையும் விதிக்கப்படும்.

லைசென்ஸ் இல்லையா ₹5 ஆயிரம்... குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ₹10 ஆயிரம் அபராதம்!
மோட்டார் வாகனச் சட்ட மசோதா. (Image: News18 Creative)
  • News18
  • Last Updated: July 24, 2019, 6:44 PM IST
  • Share this:
நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் மக்களவையில் மோட்டார் வாகனச் சட்ட மசோதா 2019 ஒப்புதல் பெற்றுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் 1988 மீதான திருத்த மசோதாவாக தற்போது மோட்டார் வாகன சட்ட மசோதா 2019 ஒப்புதல் பெற்றுள்ளது. கடந்த திங்கள் கிழமை இந்த மசோதாவை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி விவாதத்துக்குக் கொண்டு வந்தார்.

புதிய மசோதாவின் அடிப்படையில் 2ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட ’குடித்துவிட்டு வாகன ஓட்டும்’ குற்றத்துக்கு தற்போது அபராதத் தொகை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், லைசென்ஸ் இல்லாமல் ஓட்டினால் முன்னர் 500ரூபாய் அபராதமாக இருந்தது தற்போது 5ஆயிரம் ரூபாயாக அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.


சாலையில் ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடவில்லை என்றாலும் 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. 18 மாநிலங்களைச் சேர்ந்த போக்குவரத்து அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த மசோதா அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே மசோதாவில் வாகனப் பயிற்சிக்கான முறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது. சாலை விபத்தின் போது உதவுபவர்களுக்கு சாதகமாகவும் சட்டங்கள் விதிக்கப்பட்ட்ள்ளன.

சிறுவர்கள் வாகனம் இயக்கினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் வாகன உரிமையும் பறிக்கப்படும். கூடுதலாக 3 ஆண்டு சிறைத்தண்டைனையும் விதிக்கப்படும்.

 மேலும் பார்க்க: சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் போலீஸ் விசாரணையா?- சட்டம் என்ன சொல்கிறது...
First published: July 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading