ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

இந்தியாவில் விற்கப்பட உள்ள பெரும்பாலான எலெக்ட்ரிக் கார்களை உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்

இந்தியாவில் விற்கப்பட உள்ள பெரும்பாலான எலெக்ட்ரிக் கார்களை உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்

மாதிரி படம்

மாதிரி படம்

ஒரு விஷயத்தை தெளிவாக சொல்கிறேன்,  2025ம் ஆண்டளவில் நாங்கள் விற்பனை செய்யும் மாடல்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு கணிசமான மார்க்கெட் இருந்து வருகிறது. எரிபொருள் விலையேற்றங்களுக்கு மத்தியில் மின்சாரத்தில் இயங்கும் டூவீலர்கள் மற்றும் கார்களின் பக்கம் மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது.

  முதலில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகம் தயாரித்து வந்த நிலையில், தற்போது பெரிய நிறுவனங்களும் இந்த செக்மென்ட்டில் நுழைந்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன.

  இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் பிரீமியம் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், இந்தியாவில் விற்க உள்ள பெரும்பாலான எலெக்ட்ரிக் கார்களை உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்து உள்ளார்.

  சமீபத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதிக வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை விடுத்திருந்தார். புனேயில் உள்ள பென்ஸின் உற்பத்தி ஆலையிலிருந்து, Mercedes-Benz இந்தியாவின் முதல் உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட EQS 580 4MATIC EV காரை வெளியிட்ட நிகழ்வில் பேசியிருந்த கட்கரி, இப்படி செய்தால் செலவுகள் குறையும் மற்றும் மேலும் பலர் பென்ஸ் காரை சற்று எளிதாக வாங்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.

  இந்த ஆண்டு மெர்சிடிஸ் நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் அறிமுகமாக EQS உள்ளது. மேலும் நிறுவனம் தயாரிப்பாளர் இந்தியாவில் செயல்பட தொடங்கியதிலிருந்து உள்ளூரில் அசெம்பிள் செய்யப்பட்ட 14வது கார் ஆகும்.

  EQS 580 4MATIC EV காரானது ஜிஎஸ்டி சலுகைகள் மூலம் அரசால் EV-க்களுக்கு வழங்கப்படும் நன்மைகள் உள்ளிட்டவற்றுடன் பயன்படுத்தி, அதன் இன்டர்னல்-கம்ப்யூஷன் எஞ்சின் கொண்ட S-Class கார்களை விட குறைவான விலையை கொண்டுள்ளது.

  மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மார்ட்டின் ஷ்வென்க் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “தற்போதைய நிலவரப்படி EQS எலெக்ட்ரிக் காரை மட்டுமே இந்தியாவில் அசெம்பிள் செய்ய Benz திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் அதன் பெரும்பாலான எலெக்ட்ரிக் தயாரிப்புகளுக்கான உள்நாட்டு உற்பத்தி திறன்களை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

  மேலும் பேசிய அவர், "நாங்கள் EQS மாடலை நிறுத்த மாட்டோம். ஆனாலும் முக்கிய கேள்வி என்னவென்றால், எந்த மாடலை எப்போது உள்ளூர் மயமாக்குவது என்பதாக இருக்கிறது. இது குறித்து நாங்கள் இன்னும் முழுமையாக முடிவு செய்யவில்லை. சித்தராக எங்களிடம் சில திட்டங்கள் உள்ளன, ஆனால் அவை உலகளாவிய தயாரிப்பு வரிசையில் இருந்து வருவதை பொறுத்து மாற கூடியவை. இப்போது உள்நாட்டு சந்தையில் என்ன நிலவரம் என்பதை பொருத்தும் எங்கள் திட்டங்கள் மாற கூடும்" என்றார்.

  Read More: முக்கிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களுக்கு மானியம் நிறுத்தம் - மத்திய அரசு அறிவிப்பு!

  ஆனால் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்கிறேன். 2025ம் ஆண்டளவில் நாங்கள் விற்பனை செய்யும் மாடல்களில் 25% எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும். இவை அனைத்தும் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆனால் இந்த நோக்கம் முழுமையடையவிட்டாலும், விற்கப்படுவதால் பெரும்பான்மையான எலெக்ட்ரிக் கார்கள் நிச்சயமாக உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படும்” என குறிப்பிட்டார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Automobile, Mercedes benz