ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

நாங்கள் இந்த மாதிரி எலக்ட்ரிக் கார்கள் கிடைத்தால் வாங்கத் தயார் - இந்தியர்கள் விரும்பும் எலக்ட்ரிக் கார்கள்.!

நாங்கள் இந்த மாதிரி எலக்ட்ரிக் கார்கள் கிடைத்தால் வாங்கத் தயார் - இந்தியர்கள் விரும்பும் எலக்ட்ரிக் கார்கள்.!

மின்சார வாகனம்

மின்சார வாகனம்

Electric Cars | தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு தடையாக இருப்பது, அதன் விலை தான். மற்ற நாடுகளை விட இந்தியாவில் விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதையே இந்திய நுகர்வோர்கள் விரும்புகிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியர்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பது பற்றி தொடர்ந்து ஆய்வுகள், கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எலக்ட்ரிக் டூ வீலர்கள் வாங்க விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், எலக்ட்ரிக் கார்களும் இந்தியர்களின் தேர்வாக இருக்குமா என்று கேட்டால், அவ்வளவு தெளிவான பதில் கிடைக்கவில்லை.

பலரும் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதைப் பற்றி உறுதியாக முடிவு செய்யமுடியவில்லை என்பது தான் உண்மை நிலவரம். மேலும், எலக்ட்ரிக் கார்கள் வாங்க இந்தியச் சந்தையில் சில கோரிக்கைகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

காஸ்ட்ரால் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் இந்த ஆண்டு, அதாவது 2022 ஆம் ஆண்டே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எலக்ட்ரிக் வாகனம் வாங்கத் தயாராக இருக்கிறார்கள் ஆனால், நாடு முழுவதும் பெரும்பான்மையாக எலக்ட்ரிக் வாகனங்கள் சந்தப்படுத்த, குறைந்தபட்சம் 2025 ஆண்டுகள் வரை ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு தடையாக இருப்பது, அதன் விலை தான். மற்ற நாடுகளை விட இந்தியாவில் விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதையே இந்திய நுகர்வோர்கள் விரும்புகிறார்கள். சராசரியாக, உலக அரங்கில் ஒரு வாகனத்தின் விலை 27 லட்ச ரூபாய் அளவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள், தோராயமாக, 23 லட்ச ரூபாய்க்கு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதுமே ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிபுணர்கள், ஃப்ளீட் நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் முழுக்க முழுக்க மின்சாரத்தையே சார்ந்து இயங்குவதால் வேறு சில கோரிக்கைகளையும் இந்திய நுகர்வோர்கள் முன் வைத்துள்ளார்கள் என்பதும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.  ஒரு முறை சார்ஜ் செய்யும் போது, அதிகபட்சம் 35 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆக வேண்டுமென்ற கோரிக்கையும் ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டர்களுக்கு குறைந்தபட்சம் செல்ல வேண்டும் என்ற அம்சத்தோடு கட்டமைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர் என்பதை ஆய்வு வலியுறுத்தியுள்ளது.

Also Read : வாகன காப்பீடு செய்யும்போது இந்த ஆட்-ஆன்கள் மிக முக்கியம் - நிச்சயமாகப் பலன் கொடுக்கும்!

உலக அளவில் பல்வேறு எலக்ட்ரானிக் வாகன சந்தையை ஒப்பிட்டு பார்க்கும் போது 2024 ஆம் ஆண்டு முடிவதற்குள் எலெக்ட்ரானிக் வாகனங்களை பெரும்பாலானவர்கள் உலகம் முழுவதிலும் வாங்குவார்கள் என்ற நிலையில், இந்த ஆண்டின் இறுதியிலேயே பெரும்பாலான இந்தியர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும், தற்போதுதான் ஒரு புதிய தயாரிப்பு இந்தியாவின் மிகப்பெரிய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது என்ற நிலையில், மூன்றில் இரண்டு இந்தியர்கள் காத்திருந்து முடிவெடுப்பதாக கூறியுள்ளனர். அது மட்டுமில்லாமல் நாட்டில் எந்த பிராண்டுகள் எவ்வாறு செயல்பட இருக்கிறார்கள் என்பதை பார்த்து முடிவெடுக்க இருப்பதாக ஃபிளீட் நிர்வாகிகளும் தெரிவித்துள்ளனர்.

Also Read : உலகின் முதலாவது எலெக்ட்ரிக் விமானம் தனது பயணத்தை நிறைவு செய்தது!

எலெக்ட்ரிக் காரின் விலை அதிகமாக இருப்பது ஒருமுறை செய்யக்கூடிய முதலீடு தான் என்றாலுமே, எலக்ட்ரிக் காரின் நிர்வாகச் செலவு அதிகமாக இருப்பதால் 83 சதவிகித இந்தியர்கள் கார்களை வாங்குவதற்கு தயங்குகிறார்கள் என்பதையும் கணக்கெடுப்பு தெரிவித்து உள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, Electric Cars, India