ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

குறைந்த பட்ஜெட் விலையில் வாங்க கூடிய தரமான டாப் 5 ஸ்கூட்டர்கள்..!

குறைந்த பட்ஜெட் விலையில் வாங்க கூடிய தரமான டாப் 5 ஸ்கூட்டர்கள்..!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

Budget Scooters | பைக்குகளுடன் ஒப்பிடும் போது கூடுதல் இட வசதி, எரிபொருள் சேமிப்பு, இயக்குவது எளிது போன்ற வசதிகள் ஸ்கூட்டரில் உள்ளன.

பஜாஜ் காலம் தொட்டு தற்போது ஓலா எலெக்ட்ரிக் வரை ஸ்கூட்டர்கள் மீதான காதல் வாகனப்பிரியர்களுக்கு குறைவது கிடையாது. என்ன தான் விதவிதமான பைக்குகள் வரிசை கட்டி களமிறங்கினாலும் இந்தியாவில் சாமானிய மக்கள் அதிக அளவில் ஸ்கூட்டர்களை விரும்பி பயன்படுத்துகின்றனர். இதனை ஆண், பெண் வித்தியாசமின்றி இரண்டு தரப்பினருமே பயன்படுத்தலாம் என்பதால் நடுத்தர வர்க்கத்தினரின் நெம்பர் ஒன் சாய்ஸாக ஸ்கூட்டர்கள் உள்ளன.

பைக்குகளுடன் ஒப்பிடும் போது கூடுதல் இட வசதி, எரிபொருள் சேமிப்பு, இயக்குவது எளிது போன்ற காரணங்களால் இந்திய மக்களால் அதிகம் நேசிக்கப்படும் ஸ்கூட்டர்களை 70 ஆயிரத்திற்குள் வாங்க ஏற்ற பட்டியலை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.

ஹோண்டா டியோ: ஹோண்டா டியோ என்பது V-வடிவ ஹெட்லைட் மற்றும்நவீன வடிவமைப்பைக் கொண்ட ஸ்கூட்டர். இதில் 109.19 சிசி இன்ஜின் உடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்இடி ஹெட்லேம்ப் போன்ற பல அம்சங்களையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.52,241 (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

சுஸூகி அக்செஸ் 125: சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் களமிறக்கியுள்ள சுஸூகி அக்செஸ் 125 ஸ்கூட்டர், ரெட்ரோ டிசைன் உடன் 160மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 125 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பார்த்தாலே பிடித்துப்போகும் தோற்றம், சவாரிக்கு ஏற்ற இட வசதி ஆகியவற்றால் இந்திய மக்களை கவர்ந்திழுக்கும் இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.59,014 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

Also Read : கார் வாங்கும் பிளான் இருக்கா..? டாடா மோட்டர்ஸ் வழங்கும் அசத்தல் ஆஃபர்.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி: ஹோண்டா நிறுவனத்தின் ‘ஆக்டிவா’ ஸ்கூட்டர்கள் இந்தியா சந்தையில் நல்ல மதிப்பை பெற்றுள்ளது. இதன் அப்டேட் வெர்ஷனான ஹோண்டா ஆக்டிவா 6 ஜி, தற்போதையை தலைமுறையை கவர்ந்திழுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட டிசைன், இருக்கையில் அதிக இடம், ஸ்டோரேஜ் ஸ்பேஸ் போன்ற மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஹோண்டா ஆக்டிவா 6ஜி எக்ஸ் ஷோரூம் விலை ரூ.63, 912க்கு கிடைக்கிறது. சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் மூலமாக 109 சிசி பவருடன் இயங்க கூடியது.

டிவிஎஸ் ஜூபிடர்: டிவிஎஸ் ஜூபிடர் மிகவும் பிரபலமான 110சிசி ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். இதன் உறுதியான மெட்டல் பாடி மற்றும் டியூப்லெஸ் டயர்கள் சிறப்பு அம்சமாக விளங்குகிறது. டிவிஎஸ் ஜூபிடர் சீட்டிற்கு அடியில் 17 லிட்டர் கொள்ளவு கொண்ட ஸ்டோரேஜ் பாக்ஸ், சார்ஜிங் போர்ட் கனெக்‌ஷன் உடன் உள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 62 கிலேமீட்டர் வரை பயணிக்க கூடிய இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 55,349 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) முதல்தொடங்குகிறது.

டிவிஎஸ் என்டிஆர் கியூ 125: இந்தியாவில் வலம் வரும் சிறப்பம்சங்கள் நிறைந்த ஸ்கூட்டர்களில் ஒன்றாக டிவிஎஸ் என்டிஆர் கியூ 125 விளங்குகிறது. டியூப்லெஸ் டயர்கள், டாப் ஸ்பீட் ரெக்கார்டர் மற்றும் அலாய் வீல்கள் போன்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இது 124.79சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு SOHC இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இதன் விலை ரூ.59,462 (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

First published:

Tags: Automobile, Scooters