இந்தியாவில் அதிவேக ரயில் சேவையாக வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்டத்தில் சில விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் மேலும் விரிவாகப்பட்டு தொடர்ந்து தென்னிந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதை இன்னும் ஊக்குவிக்கும் படி, இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தென்னிந்தியாவின் பல்வேறு வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில்கள் வரும் நாட்களில் இயக்கப்படும் என கூறியுள்ளது. முதற்கட்டமாக மூன்று புதிய வந்தே பாரத் ரயில்கள் தென்னிந்தியாவில் புதிய வழித்தடங்களில் இயக்கப்படும்.
அவை தெலுங்கானாவில் உள்ள காச்சிகுடாவில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு வரையும், தெலுங்கானாவின் செகந்திராபாத்திலிருந்து ஆந்திராவில் திருப்பதி வரையும், மேலும் புனேவில் உள்ள மகாராஷ்ட்ரா வரை ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே கடந்த நவம்பர் மாதம் தான் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலானது சென்னை முதல் பெங்களூர் வரையிலான வழித்தடத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து இந்த வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார். மேலும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்தாவது வந்தே பாரத் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
அதற்கு அடுத்தபடியாக சமீபத்தில் செகந்திராபாத்-விசாபட்டினம் வழிதடத்தில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. ரயில் சேவை துவங்கப்பட்ட நேரத்தில் இருந்து தற்போது வரை 100% பயணிகளுடன் தனது பயணத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
இந்த வருடத்தின் இறுதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இந்திய ரயில்வே இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அடுத்த மூன்று வருடங்களுக்குள் 400 க்கும் மேற்பட்ட வந்தே ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி நாக்பூர் – பிலாஸ்பூர், டெல்லி – வாரணாசி, காந்திநகர் – மும்பை மற்றும் சென்னை - மைசூர் என்ற வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன.
வந்தே பாரத் ரயில்கள் அனைத்தும், இன்டெக்ரல் கோச் ஃபேக்டரி அதாவது ஐசிஎப் என்ற சென்னை பெரம்பூரிலிருக்கும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் படி உருவாக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways, Train, Vande Bharat