ராயல் என்ஃபீல்ட் Continental GT 650 பைக்கின் புதிய அவதாரம் - இப்படியும் கூட மாடிஃபிகேஷன் செய்யலாமா?

ராயல் என்ஃபீல்ட் Continental GT 650 பைக்கின் புதிய அவதாரம் - இப்படியும் கூட மாடிஃபிகேஷன் செய்யலாமா?

பைக்கின் எஞ்சினை தனித்துவமாக காட்டும் வகையில் பாடி பேனல்கள் நீக்கப்பட்டுள்ளதால் நேக்கட் தோற்றத்தில் பைக் காட்சியளிக்கிறது.

பைக்கின் எஞ்சினை தனித்துவமாக காட்டும் வகையில் பாடி பேனல்கள் நீக்கப்பட்டுள்ளதால் நேக்கட் தோற்றத்தில் பைக் காட்சியளிக்கிறது.

  • Share this:
    ராயல் என்ஃபீல்ட் நிறுவனம், காண்டினெண்டல் ஜிடி 650 மற்றும்
    இண்டர்செப்டார் 650 என்ற இரட்டை மோட்டார்சைக்கிள்களை
    சந்தையில் அறிமுகப்படுத்திய போதே அவற்றின் பெரிய சைஸ்
    எஞ்சினும், கண்ணைப் பறிக்கும் டிசைனும், அதன் பயண
    அனுபவமும் ஆட்டோமொபைல் ஆர்வலர்களை
    பரவசப்படுத்துவதாக அமைந்தது.

    காண்டினெண்டல் ஜிடி பைக்கினை இந்தளவுக்கு கூட மெருகேற்றி, மாற்றியமைக்க முடியுமா என வியக்கும் வகையில் ஒருவர் இதனை மாற்றியமைத்திருக்கிறார்.



    'The 30s' என பெயரிடப்பட்டுள்ள இந்த பைக்கினை அதிகா பிரதமா என்பவர் தனது கேரேஜில் உருமாற்றியுள்ளார். காண்டினெண்டல் ஜிடியின் எஞ்சினை தனித்துவமாக காட்டும் வகையில் இந்த பைக்கின் பாடி பேனல்களை நீக்கியுள்ளனர்.

    சேசிஸின் கருப்பு வண்ணத்துக்கு இணையாக எஞ்சினின் அனைத்து பகுதிகளும் கிளாஸ் கருப்பு வண்ண பெயிண்டிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் வளைவான மற்றும் நீளமான எக்ஸாஸ்ட் பைப், பைக்கின் கவர்ச்சியை தூக்கலாக்குகிறது.



    இதன் வழக்கமான டயர்களை நீக்கிவிட்டு அகலமான 7 இஞ்ச் ஸ்போக் வீல்களில் பெரிய டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் டூயல் பிரெம்போ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் சிங்கில் டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளன. முன்புறத்தில் அப்சைட் டவுன் ஃபோர்க்கும், பின்புறத்தில் அட்ஜஸபிள் மோனோஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் உள்ள புதிய மோனோஷாக் அப்சார்பருக்காக ரியரில் உள்ள ஃபிரேம் நேர்த்தியாக மாடிஃபை செய்யப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Arun
    First published: