அதே சொகுசுடன் நவீன வடிவமைப்புகளுடன் மீண்டும் வருகிறது அம்பாஸடர்!

அம்பாஸ்டரில் டெஸ்லாவில் இருப்பது போன்றதொரு இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Web Desk | news18
Updated: August 31, 2019, 5:36 PM IST
அதே சொகுசுடன் நவீன வடிவமைப்புகளுடன் மீண்டும் வருகிறது அம்பாஸடர்!
புதிய அம்பாஸடர்
Web Desk | news18
Updated: August 31, 2019, 5:36 PM IST
ஒரு காலத்தில் பணக்காரர்களுக்கும் அரசியல் தலைவர்களும் மிகவும் விருப்பமான காராக இருந்த அம்பாஸடர் தற்போது நவீனமயமாகி மீண்டும் விற்பனைக்கு வருகிறது.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் நின்றுபோன தனது ட்ரேட்மார்க் அம்பாஸடர் காரை மீண்டும் சந்தைப்படுத்தத் தயாராகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அம்பாஸடர் பயன்பாடு இன்று இல்லாமல் போனாலும் அந்த காருக்கான ரசிகர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அம்பாஸடர் மீண்டும் வராதா என்று எதிர்பார்ப்புக்கு விடையாக புதிய அம்பாஸடரின் தோற்றம் ஆன்லைனில் உலவி வருகிறது. அதே சொகுசான தோற்றத்தில் டெஸ்லா போன்றதொரு டச் ஸ்கிரீன் அமைப்புடன் உட்புறமே நவீனமாயக்கப்பட்டுள்ளது.


வெளிப்புறத் தோற்றம் குறித்து எதுவும் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. அம்பாஸ்டரில் டெஸ்லாவில் இருப்பது போன்றதொரு இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.

மேலும் பார்க்க: 2020-க்குள் 500 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்கிறது டாடா
First published: August 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...