Home /News /automobile /

அமைச்சர் கே.என்.நேரு வலம்வரும் இன்னும் இந்திய சந்தைக்கு வராத லேண்ட் க்ரூஸர் 300இன் சிறப்பம்சங்கள்!

அமைச்சர் கே.என்.நேரு வலம்வரும் இன்னும் இந்திய சந்தைக்கு வராத லேண்ட் க்ரூஸர் 300இன் சிறப்பம்சங்கள்!

Land cruiser 300

Land cruiser 300

Land cruiser 300: இந்தியாவில் இன்னும் விற்பனைக்கே வராத டொயோட்டா லேண்ட் க்ரூஸர் சொகுசு காரை, அமைச்சர் கே.என்.நேரு வாங்கியிருப்பது, சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது

  இந்தியாவில் இன்னும் விற்பனைக்கே வராத டொயோட்டா லேண்ட் க்ரூஸர் சொகுசு காரை, அமைச்சர் கே.என்.நேரு வாங்கியிருப்பது, சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இப்போது புக் செய்தால் 4 ஆண்டுகளுக்கு பிறகே கிடைக்கும் அந்த காரின் சிறப்புகள்பற்றி பார்ப்போம்.

  உலக அளவில் பல்வேறு கார்களை உற்பத்தி செய்யும் டொயோட்டா நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடல்களில் ஒன்று லேண்ட் க்ரூஸர் (Land Cruiser). கரடு முரடான சாலைகள், முள் நிறைந்த காடுகள், மணல் நிறைந்த பாலைவனங்கள் என எந்த பாதையிலும் பயணம் செய்யும் திறன் கொண்டது.

  கேங்ஸ்டர் இல்ல.. ஒத்தையா வரும் மான்ஸ்டர் - மீண்டும் களமிறங்கும் யமஹா ஆர்எக்ஸ்100

  LC300 நான்கு-மண்டல காலநிலை கட்டுப்பாடு மற்றும் 7 இருக்கைகள், 12.3-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் 14-ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

  ஹில்-அசிஸ்ட் கண்ட்ரோல், டிரைவர் அசிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் மற்றும் நான்கு கேமரா பனோரமிக் வியூ மானிட்டர் போன்ற ஆஃப்-ரோடு கிட்களும் உள்ளது. 3.3லி ட்வின்-டர்போ V6 டீசல் எஞ்சின் சக்தியோடு உள்ள இந்த காரின் அதிகபட்ச மைலேஜ், ஒரு லிட்டர் டீசலுக்கு வெறும் 4 கிலோ மீட்டர் மட்டுமே

  பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட பல தலைவர்களின் பேவரிட் காராக இருந்தது இந்த லேண்ட் க்ரூஸர் கார் தான்.

  தற்போது, லேண்ட் க்ரூஸர் எல்.சி. 300 மாடலை சஹாரா வெர்ஷனில் விரைவில் இந்தியாவில் களமிறக்க உள்ளது டொயோட்டா. புதிய மாடலில் கூடுதலாக சில அம்சங்களை சேர்த்துள்ளதோடு, கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட செமி கண்டக்டர் தட்டுப்பாடு காரணமாக, போதிய அளவில் உற்பத்தி செய்ய முடியாமல் திண்டாடி வருகிறது. அதனால், லேண்ட் க்ரூஸர் எல்.சி. 300 மாடலை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வர டொயோட்டா திட்டமிட்டுள்ளது.  இந்த காரின் விலை சுமார் 2 கோடி ரூபாய் என்றாலும், பணத்தை கொடுத்தவுடன், கிடைத்துவிடாது.லேண்ட் க்ரூஸர் காரை புக்கிங் செய்து, கையில் வாங்குவதற்கு, 6 மாதங்களாக முன்பு இருந்த காத்திருப்பு காலம் தற்போது 4 ஆண்டுகளாக உள்ளது. இன்னும் இந்தியாவில் விற்பனை செய்யும் அறிவிப்பு ஏதுமில்லை.

  பொதுவாக, சொகுசு கார்களை பொறுத்தவரை வெளிநாடுகளிலேயே முழுவதுமாக கட்டமைக்கப்பட்டது அல்லது உதிரி பாகங்களை கொண்டு வந்து, உள்நாட்டில் கட்டமைப்பது என இரு வகைகள் உண்டு.கார்களுக்கான உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கான வரி குறைவு என்பதால், பல கார்கள் அப்படித்தான் இந்தியாவில் தயாராகின்றன.  ஆனால், சொகுசு கார்கள் பெரும்பாலும் முழுவதுமாக கட்டமைக்கப்பட்டே இறக்குமதி செய்யப்படுவதால், கார் விலைக்கு இணையாக இறக்குமதி வரியைச் செலுத்த வேண்டும்.  அதாவது 2 கோடி ரூபாய் மதிப்பிலான காரை இறக்குமதி செய்தால், அதே 2 கோடி ரூபாயை வரியாக செலுத்த வேண்டும். அப்படி செய்வதன் மூலம் அந்த காருக்கான மொத்த விலை 4 கோடி ரூபாய் என்றாகும். அதன்பிறகு, பதிவு கட்டணம், மாநில அரசு வரிகள், காப்பீட்டு கட்டணம் என பல லட்சங்கள் செலவாகும். இதனாலேயே பலரும் வெளிநாட்டில் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட கார்களை இறக்குமதி செய்ய தயங்குவர்.

  ஆனால், பல பிரபலங்கள் எல்லோருக்கும் முன்பாக, நாம் அந்த காரை பயன்படுத்திவிட வேண்டும் என விரும்பி, பல கோடிகளை செலவழித்து வாங்குகின்றனர். அப்படி தான் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இப்போது இந்த காரை வாங்கி வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Automobile, Car, Toyota

  அடுத்த செய்தி