இன்றைய இளைஞர்கள் சொந்த வாகனம் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை- ஆய்வு

தற்போதைய சூழலில் இந்தியவில் 47 சதவிகித மக்கள் சொந்த வாகனங்கள் வைத்துள்ளார்களாம்.

இன்றைய இளைஞர்கள் சொந்த வாகனம் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை- ஆய்வு
மாதிரிப்படம் (Reuters)
  • News18
  • Last Updated: July 2, 2019, 5:23 PM IST
  • Share this:
2k கிட்ஸ் என்று அழைக்கப்படும் மில்லெனியல் இளைஞர்கள் சொந்த வாகனம் வைத்துக்கொள்வதற்கான அவசியம் இல்லை என்று கூறுவஹாக டெலாய்ட் ஆய்வு கூறுகிறது.

சர்வதேச அளவில் வாகனங்கள் வாங்குவோர் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் நிறுவனம் டெலாய்ட். இந்நிறுவனம் இந்திய இளைஞர்கள் மத்தியில் கார், பைக் போன்ற சொந்த வாகனங்கள் வாங்க வேண்டும் அல்லது வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

இந்த நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியாவின் 51 சதவிகித இளைஞர்கள் சொந்த வாகனம் வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்புகின்றனராம். அதற்குப் பதிலாக பொதுப் போக்குவரத்து, ஷேரிங் போக்குவரத்து முறை ஆகியவற்றையே இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள் என்றும் டெலாய்ட் ஆய்வு கூறுகிறது.


ஜென் Y/Z இளைஞர்களில் 51 சதவிகிதம் பேர் சொந்த வாகனங்கள் வைத்துக்கொள்வதை விரும்பவில்லை. இந்தக் கருத்தை 44 சதவிகித ஜென் X இளைஞர்களும் ஆமோதிக்கின்றனர் என்கிறது ஆய்வு. சர்வதேச அளவிலும் இதே நிலைதான் நீடிக்கிறதாம்.

தற்போதைய சூழலில் இந்திய அளவில் 47 சதவிகித மக்கள் சொந்த வாகனங்கள் வைத்துள்ளார்களாம். இந்த விகிதாச்சாரம் 50% ஆக அடுத்த மூன்று ஆண்டுகளில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: ஜிஎஸ்டி-யைக் குறைத்தால் பொருளாதாரம் மேம்படும்: ஆனந்த் மஹிந்திரா
First published: July 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்