நம்பிக்கையுடன் மைக்கேல் சூமாக்கரின் 50-வது பிறந்தநாளைக் கொண்டாடிய குடும்பம்!

கடந்த 2013-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடந்த கார் பந்தயத்தின் போது எதிர்பாரா விபத்தில் சிக்கிய சூமாக்கர் படுகாயமடைந்தார்.

Web Desk | news18
Updated: January 4, 2019, 12:03 PM IST
நம்பிக்கையுடன் மைக்கேல் சூமாக்கரின் 50-வது பிறந்தநாளைக் கொண்டாடிய குடும்பம்!
மைக்கேல் சூமாக்கர்
Web Desk | news18
Updated: January 4, 2019, 12:03 PM IST
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விபத்தால் கோமா நிலைக்குச் சென்ற பிரபல கார் ரேஸ் வீரர் மைக்கேல் சூமாக்கரின் குடும்பத்தார் நேற்று அவரின் 50-வது பிறந்தநாளை நம்பிக்கையுடன் கொண்டாடினர்.

ஃபார்முலா கார் பந்தயத்தின் நட்சத்திர வீரராக பல ஆண்டுகளாகக் கலக்கி வந்தவர் மைக்கேல் சூமாக்கர்.

கடந்த 2013-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடந்த கார் பந்தயத்தின் போது எதிர்பாரா விபத்தில் சிக்கிய சூமாக்கர் படுகாயமடைந்தார். அதன் பின்னர் கோமாவில் சூமாக்கர் சிகிச்சைப் பெற்று வருவதாக செய்திகள் வெளியாகின.

அதன் பின்னர் தொடர்ந்து சூமாக்கரின் உடல்நிலை குறித்தத் தகவல்கள் அவரது குடும்பத்தார் மட்டும் அறிந்த ரகசியமாகவே வைக்கப்பட்டு உள்ளது.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் சூமாக்கரின் குடும்பத்தார் பொதுவெளியில் சூமாக்கரின் 50-வது பிறந்தநாள் கொண்டாட்டப் பகிர்வை நம்பிக்கையுடன் பகிர்ந்து உள்ளனர். சூமாக்கரின் வேண்டுகோளால் மட்டுமே அவரது உடல்நிலை குறித்தத் தகவல்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

சூமாக்கரின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சாதனைகளைப் பேசும் புதிய ஆப் ஒன்றை அவரது குடும்பத்தார் வெளியிட்டுள்ளனர்.

சூமாக்கரின் நினைவுகளோடு இந்தப் புதிய ஆப் ஒரு ‘வெர்சுவல் மியூசியம்’ ஆக இருக்கும் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
Loading...
மேலும் பார்க்க: திருவாரூர் தேர்தல் கதை
First published: January 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...