MG மோட்டார்ஸின் ZS எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு தொடக்கம்..! முந்துவோருக்கு சிறப்புச் சலுகை

ஆன்லைனில் MG மோட்டார்ஸ் இணைய பக்கத்திலும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

MG மோட்டார்ஸின் ZS எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு தொடக்கம்..! முந்துவோருக்கு சிறப்புச் சலுகை
MG-ZS
  • News18
  • Last Updated: December 24, 2019, 11:02 PM IST
  • Share this:
MG மோட்டார்ஸ் இந்தியா ZS எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவைத் தொடங்கியுள்ளது. MG மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ஹெக்டார் கார் மூலம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

தற்போது புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது MG மோட்டார்ஸ். முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளையும் இந்நிறுவனம் வழங்குவதாக அறிவித்துள்ளது. MG ZS எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு தொகை 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.

முதற்கட்டமாக டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூரு மற்றும் ஹைதரபாத் ஆகிய நகரங்களில் மட்டுமே நேரடி விற்பனை நடக்கிறது. ஆன்லைனில் MG மோட்டார்ஸ் இணைய பக்கத்திலும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். MG ZS காருக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் 335 கி.மீ தூரம் வரையில் பயணிக்க முடியும் என்பது சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.


அதிவேக டிசி சார்ஜர்கள் மூலமாக சார்ஜ் செய்தால் 50 நிமிடங்களில் 80 சதவிகிதம் சார்ஜ் செய்யலாம். வீட்டில் ஏசி சார்ஜர் மூலமாக சார்ஜ் செய்தால் முழுமையாக சார்ஜ் ஆக 6 முதல் 8 மணி நேரங்கள் ஆகும். MG ZS எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை மறுபயன்பாடு செய்யும் வகையிலும் பாதுகாப்பான அப்புறப்படுத்துதலுக்கு ஏற்ற முறையிலும் பொறுப்புணர்வுடன் வடிவமைத்து இருப்பதாக MG தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களில் மாருதி கார் முதலிடம்..!
First published: December 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading