• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • MG மோட்டார்ஸின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ZS... தொடங்கியது முன்பதிவு

MG மோட்டார்ஸின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ZS... தொடங்கியது முன்பதிவு

MG-eZS

MG-eZS

MG ZS காருக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் 335 கி.மீ தூரம் வரையில் பயணிக்க முடியும் .

  • News18
  • Last Updated :
  • Share this:
    MG மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான ZS வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

    இந்தியாவில் MG ZS காரை முன்பதிவு செய்ய விரும்புவோர் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி செய்து கொள்ளலாம். வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ள இந்த காருக்காக MG மோட்டார்ஸ் பல முக்கிய நகரங்களில் எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் பணியைத் தொடங்கிவிட்டது.

    MG மோட்டார்ஸ் ஹெக்டார் எஸ்யூவி மூலம் இந்திய சந்தையில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இரண்டாவது காரை எலெக்ட்ரிக் வாகனமாக அறிமுகம் செய்துள்ள MG, ZS காருக்கும் அதிகப்படியான வரவேற்பு கிடைக்கும் என்றே எதிர்பார்கிறது. வெளிநாடுகளில் உள்ள ஒரு எலெக்ட்ரிக் காரின் அத்தனை அப்டேட் அம்சங்களும் MG ZS-லும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

    டிசம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ள MG ZS காரை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய சுமார் 2,200 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. MG ZS காருக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் 335 கி.மீ தூரம் வரையில் பயணிக்க முடியும் என்பது சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.

    மேலும் பார்க்க: அசுரா...பெயருக்கேற்ற அசுரத் தோற்றத்துடன் ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 500!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: