Home /News /automobile /

இந்திய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை... முதலிடத்தைக் கைப்பற்றிய நிறுவனம் எது?

இந்திய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை... முதலிடத்தைக் கைப்பற்றிய நிறுவனம் எது?

MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி

MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி

எல்க்ட்ரிக் அல்லாத வாகனங்களில் எம்ஜி ஹெக்டாருக்கு எஸ்யூவி பிரிவில் அதிகப்படியான வரவேற்பு கிடைத்துள்ளது

  • News18
  • Last Updated :
    இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனை 2020-ம் ஆண்டு தொடக்கம் முதலே அதிகரித்து வருகிறது.

    கடந்த பிப்ரவரி மாத விற்பனையின் அடிப்படையில் இந்தியாவில் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் எம்ஜி மோட்டார் முதலிடம் பெற்றுள்ளது. எம்ஜி மோட்டாரின் ZS என்னும் எலெக்ட்ரிக் கார் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் காராக உள்ளது.

    கடந்த பிப்ரவரியில் மட்டும் 1,376 எம்ஜி ZS எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆகியுள்ளன. எலெக்ட்ரிக் கார்களுக்கு வரவேற்பு அதிகரிப்பது இதன் மூலம் நிரூபணம் ஆவதாக கார் உற்பத்தி நிறுவனங்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றன. கூடுதலாக எம்ஜி மோட்டார்ஸின் ZS எலெக்ட்ரிக் காருக்கு 3,000 பேர் முன்பதிவும் செய்துள்ளனர்.

    எம்ஜி மோட்டாரின் ZS எலெக்ட்ரிக் காரின் விலை 20.88 லட்சம் ரூபாய் ஆகும். எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டும் டெலிவரி செய்யாமல் அதனுடன் சார்ஜிங் சாதனங்களையும் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் இணைத்து இன்ஸ்டால் செய்து வழங்குவதால் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைக்குப் பெரும் பாராட்டுகள் குவிகின்றன.

    எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் கால் பதித்து இன்னும் ஓராண்டு கூட முழுமை பெறாத சூழலில் இந்தியாவில் 206 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல் எல்க்ட்ரிக் அல்லாத வாகனங்களில் எம்ஜி ஹெக்டாருக்கு எஸ்யூவி பிரிவில் அதிகப்படியான வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் பார்க்க: ஏப்ரல் 1-ம் தேதி முதல் BS-VI கார்கள் மட்டுமே..!- அதிரடி ஆஃபர்களை வழங்கும் மாருதி, ஹூண்டாய்!
    Published by:Rahini M
    First published:

    Tags: Electric Cars

    அடுத்த செய்தி