Home /News /automobile /

இந்தியாவில் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை எட்டி தொட்ட MG Motor!

இந்தியாவில் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை எட்டி தொட்ட MG Motor!

MG Motors

MG Motors

MG Motors | எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தனது தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து பணியிடங்களிலும் 37 சதவீத பெண் ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது. டிசம்பர் 2023 க்குள் 50% ஐ எட்டுவதை இலக்காகக் நிர்ணயித்துள்ளது.

இந்தியாவின் புதிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எம்ஜி மோட்டார், 3 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக ஹெக்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது அந்த கார் லட்சம் யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த எம் ஜி மோட்டார் நிறுவனம் சீனாவைச் சேர்ந்த சாயிக் நிறுவனத்துடன் கைகோர்த்து இந்தியாவில் 2019ம் ஆண்டு கால் பதித்தது. எம்.ஜி மோட்டார் நிறுவனம் இந்தியா வரலாற்றிலேயே முதன் முறையாக இன்டர்நெட் எஸ்யூவி – ஹெக்டர், பியூர் எலக்ட்ரிக் இன்டர்நெட் எஸ்யூவி– இசட்.எஸ் எலெக்டெரிக் கார் (ZS EV), இந்தியாவின் முதல் அட்டானமஸ் பிரீமியம் எஸ்யூவி குளோஸ்டர் மற்றும் எம்.ஜி. ஆஸ்டர் எஸ்.யு.வி. ஆகிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

எம்ஜி மோட்டார் நிறுவனம் இடத்திற்கு தகுந்தார் போல் கார்களை வடிவமைக்க வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டுள்ளது. எனவே இதன் கார்கள் இந்திய சாலைகளுக்கு ஏற்ற சிறப்பான பாதுகாப்பை தருகின்றன. இந்தியாவில் CASE (கனெக்ட், அட்டானமஸ், ஷேர் மற்றும் எலெக்ட்ரிக்) என்பதை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதாவது புதுவிதமான சக்திகளை பயன்படுத்தி வாகனங்களை இயக்க கூடிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் எம் ஜி மோட்டார் J.D. பவர் 2021 இன் இந்திய விற்பனை திருப்தி ஆய்வு (SSI) மற்றும் இந்திய வாடிக்கையாளர் சேவை குறியீட்டு ஆய்வு (CSI) ஆகியவற்றில் நம்பர் 1 இடம் பெற்றது. ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) வெளியிட்டுள்ள கருத்தின் படி, கார் விற்பனைக்காக வெகுஜன சந்தையில் டீலர்களை திருப்திபடுத்துவதில் எம்.ஜி. மோட்டார் இரண்டாவது இடத்தில் உள்ளது.



எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தனது தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து பணியிடங்களிலும் 37 சதவீத பெண் ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது. டிசம்பர் 2023 க்குள் 50% ஐ எட்டுவதை இலக்காகக் நிர்ணயித்துள்ளது. மேலும் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை விரிவுபடுத்துவதன் மூலமாகவும், வாடிக்கையாளர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து கற்பிப்பதன் மூலமும் இந்தியாவில் ஒரு எண்ட்-டு-எண்ட் EV சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வருகிறது.

Also Read : டாடா கார்களுக்கு ரூ.65,000 வரை தள்ளுபடி..

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜீவ் சாபா கூறுகையில், “ஊழியர்கள், டீலர்கள், சப்ளையர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட உறுதியான அடித்தளத்தை நிறுவியதன் மூலமாக நாங்கள் பெற்றுள்ள இந்த அன்பு மற்றும் நம்பிக்கைக்கு நன்றியுள்ளவர்களாக செயல்படுவோம். ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வுகள் மூலம் இந்திய மொபிலிட்டி வெளியில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் எங்களின் அர்ப்பணிப்பு ஒவ்வொரு நாளும் வலுப்பெற்று வருகிறது.

Also Read : மைலேஜ் சேலஞ்சில் அசத்திய யமஹா ஸ்கூட்டர்கள்..

முக்கிய தூண்களான புதுமை, அனுபவங்கள், பன்முகத்தன்மை மற்றும் சமூகம் ஆகியவற்றிற்கு ஏற்ப, ஆரம்பத்தில் இருந்தே எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொரு பங்குதாரரையும் மகிழ்விக்கும் விதத்தில் எங்களால் சிறந்ததை வழங்க முயற்சி செய்கிறோம். இன்று, எங்கள் தயாரிப்புகள் மற்றும் முன்முயற்சிகள் மூலம் இயக்கம் மற்றும் சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Automobile

அடுத்த செய்தி