Home /News /automobile /

MG மோட்டார்ஸ் அறிமுகம் செய்த புதிய ஆஸ்டர் EX வேரியண்ட் - சிறப்பம்சங்கள், விலை முழு விவரம்!

MG மோட்டார்ஸ் அறிமுகம் செய்த புதிய ஆஸ்டர் EX வேரியண்ட் - சிறப்பம்சங்கள், விலை முழு விவரம்!

MG மோட்டார்ஸ்

MG மோட்டார்ஸ்

எம்ஜி நிறுவனம் அதன் பிரபல காம்பாக்ட் எஸ்யூவியான ஆஸ்டர் எஸ்யூவி காரில் புதிதாக 4 வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்தியர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை தூண்டக்கூடிய எஸ்யூவிக்களில் ஒன்றாக எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஆஸ்டர் உள்ளது. எம்ஜி ஆஸ்டர் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், வோக்ஸ்வேகன் டைகன் போன்றவற்றுக்கு போட்டியாக உள்ளது. ஸ்கோடா குஷாக், டாடா ஹாரியர் ஆகியவை தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் காம்பாக்ட் எஸ்யூவிகளில் ஒன்றாகும். விரைவில் இரண்டு காம்பாக்ட் எஸ்யூவிகளான டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் மாருதி சுஸுகி விட்டாரா ஆகியவையும் இந்த பட்டியலில் இணைய உள்ளது.

    இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்டர் எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் பவர்டிரெய்னுடன் புதிய வகைகளை எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

    தற்போது ஆஸ்டர் எஸ்யூவியின் புதிய 4 வேரியண்ட்கள், காரின் காம்பாக்ட் அளவைப் போலவே விலையையும் பட்ஜெட்டிற்குள் அடங்கும் படி கச்சிதமாக அமைந்துள்ளது. புதிய வகைகளின் விலை 10.22 லட்சம் முதல் 14.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், MG மோட்டார் நிறுவனம், இந்த புதிய வகைகளில் சில சமரசங்களைச் செய்து, விலையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.



    நான்கு வேரியண்ட்கள்:

    எம்ஜி நிறுவனம் அதன் பிரபலமான ஆஸ்டர் எஸ்யூவி காரில் Style EX, Super EX, Smart EX, Sharp EX ஆகிய வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இதே வகையில், ஆஸ்டர் வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த வேரியண்ட்கள் அனைத்தும் 6000 ரூபாய் மட்டுமே அதிகமாக உள்ளது. மேலும் இதன் Sharp EX மாடல் கார் 12 ஆயிரம் ரூபாய் விலை குறைவாக உள்ளது.

    விலை விவரம்:

    • ஆஸ்டரின் ஸ்டைல் (Style) ​​வேரியண்ட் ரூ. 10.22 லட்சம்

    • ஆஸ்டர் எக்ஸ் (Style EX) வேரியண்ட் - ரூ.10.28 லட்சம் (ரூ.6 ஆயிரம் அதிகம்)

    • சூப்பர் எக்ஸ்(Super EX ) வேரியண்டின் விலை - ரூ. 11.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

    • ஸ்மார்ட் எக்ஸ் (Smart EX ) வேரியன்டின் விலை - ரூ. 13.52 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

    • ஷார்ப் எக்ஸ் (Sharp EX) வேரியண்ட் விலை - ரூ. 14.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)


    சிறப்பம்சங்கள்:

    ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் செமிகண்டக்டர் தட்டுப்பாட்டிற்கு மத்தியில், ஆஸ்டர் எஸ்யூவி வேரியண்ட்களின் விலையை குறைக்க எம்ஜி மோட்டார் நிறுவனம் முயன்று வருகிறது. புதிய வேரியண்ட்களில் 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் அல்லது ESC, ஹில் ஹோல்ட் மற்றும் ஹில் டீசென்ட் கன்ட்ரோல்கள் போன்ற சில அம்சங்களும், பிளைண்ட் ஸ்பாட் கண்டறிதல், லேன் செஞ்ச் அசிஸ்டெண்ட், மற்றும் ரியர் கிராஸ் டிராபிக் அலர்ட் போன்ற பாதுகாப்பு தொடர்பான அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.

    பெட்ரோல், டீசல் மாடல்கள்:

    எம்ஜி மோட்டார் ஆஸ்டர் எஸ்யூவியை வாடிக்கையாளர்களுக்காக இரண்டு எஞ்சின் விருப்பங்களுடன் வழங்குகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டருடன் வருகிறது. இதில் 1.5 லிட்டர் மாடல், 110 140 பிபிஎஸ் பவர் மற்றும் 144Nm முறுக்கு விசையையும் வழங்குகிறது. 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 140 பிபிஎஸ் பவர் மற்றும் 220 என்எம் முறுக்கு விசையும் வெளிப்படுத்தும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Suv car

    அடுத்த செய்தி