ஜியோவுடன் கூட்டு சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்: அதிநவீன கார்களை தயாரிக்க இலக்கு!

ஜியோ-எம்.ஜி.மோட்டார்ஸ்

எஸ்யூவி கார்களில் பயணத்தின்போது தடையில்லா இணைய சேவையை பெற (Internet of things- IOT)  ஜியோவுடன் கூட்டு சேர்ந்திருப்பதாக எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

 • Share this:
  பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி. மோட்டார்ஸ் இந்தியா  தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான ஜியோவுடன்  கூட்டு சேர்த்து புதியவகை எஸ்யூவி ரக கார்களை தயாரிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

  கார் தயாரிப்பில் குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்றாக எம்.ஜி. மோட்டார்ஸ் இந்தியா (Morris  Garages  Motor india) திகழ்கிறது.  ஹெக்டர், ZS EV  உட்பட பல்வேறு ரக  கார்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோவுடன் கூட்டு சேர்வதாக எம்.ஜி. மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எம்.ஜி.மோட்டார்ஸ் நிறூவனம் இந்தியாவில் புதிய எஸ்யூவி (SUV  ரக கார்களை அறிமுகம் செய்யவுள்ளது.  இந்த எஸ்யூவி கார்களில் பயணத்தின்போது தடையில்லா இணைய சேவையை பெற (Internet of things- IOT)  ஜியோவுடன் கூட்டு சேர்ந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  எனவே, புதிய எஸ்யூவி ரக கார்களின் வாடிக்கையாளர்கள் ஜியோவின்  பரந்துவிரிந்த இணைய சேவையின் மூலம் மெட்ரோ நகரங்களில் மட்டுமல்லாது சிறு நகரங்கள், கிராமங்கள் ஆகிய பகுதிகளிலும் பயன்பெற முடியும் என எம்.ஜி.மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

  இதையும் படிக்க: குறிப்பிட்ட வாகனங்களின் விலையை உயர்த்திய டாடா மோட்டார்ஸ்! செப்டம்பர் முதல் அமல்..!


  இது தொடர்பாக எம்.ஜி. மோட்டார்ஸ் இந்தியாவின்  தலைவர் மற்றும் சி.இ.ஓ ராஜீவ் சாபா கூறுகையில், “தொழில்நுட்பம், புதுமை ஆகியவை  ஆட்டோமொபைல் துறையில் கார்களுக்கான இடங்களை வழிநடத்துகின்றன.  தற்போதைய போக்கு, மென்பொருள் சார்ந்த சாதனங்களில் அதிகம் கவனம் செலுத்துகின்றன. எனவே, ஜியோ போன்ற தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள  நிறுவனத்துடன் கூட்டு சேர்வது  ஆட்டோமொபைல் துறையில் எம்.ஜி. மோட்டார்ஸை  முன்னணி நிறுவனமாக கட்டமைப்பதற்கான ஒரு படியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க: இந்தியாவில் ரூ.15 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் வாங்கக்கூடிய சிறந்த கார்களின் பட்டியல்!


  ஜியோவின் இயக்குநரும் தலைவருமான திரு.கிரண் தாமஸ் இந்த கூட்டு குறித்து கூறுகையில்,  இந்திய பயனாளர்களுக்கான அதிநவீன தொழில்நுட்ப தயாரிப்புகள் குறை தீர்வுகளுக்கான சூழலை ஜியோ நிறுவனம் கட்டமைத்து வருகிறது.  எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்துடனான கூட்டு இந்த பயணத்தின் முக்கிய படியாகும். ஜியோவின் இ-சிம், ஐ.ஒ.டி. மற்றும் ஸ்ட்ரீமிங்  தீர்வுகள் எம்.ஜி. மோட்டார்ஸ் பயனர்களுக்கு பெரிதும் உதவும்’ என்று தெரிவித்தார்.
  Published by:Murugesh M
  First published: