Home /News /automobile /

புதிய MG ZS எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்திய MG Motor India!

புதிய MG ZS எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்திய MG Motor India!

Electric Car

Electric Car

2022 MG ZS EV in India | காரின் பின்புறத்தில் செய்யப்பட்டுள்ள டிசைன் அப்டேட்களில் திருத்தப்பட்ட LED டெயில்-லேம்ப்கள் மற்றும் ரியர் பம்பர் ஆகியவை அடங்கும். 17 இன்ச் அலாய் வீல்களின் புதிய செட்டை பெற்றுள்ளது.

எம்ஜி மோட்டார் இந்தியா (MG Motor India) நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட MG ZS EV எலெக்ட்ரிக் எஸ்யூவி-யை சமீபத்தில் (மார்ச் 7) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் Excite மற்றும் Exclusive என்ற 2 வேரியன்ட்களில் வருகிறது. காரின் என்ட்ரி-லெவல் Excite வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.21.99 லட்சம், Exclusive வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.25.88 லட்சம் ஆகும்.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2022 MG ZS EV பல டிசைன் அப்டேட்ஸ் மற்றும் புதிய அம்சங்களுடன் வருகிறது. மேலும் இது புதிய iSmart UI உடன் வருகிறது, மேலும் அதிக மைலேஜிற்கு ஒரு பெரிய பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. MG Motor India ஏற்கனவே 2022 MG ZS EV-க்கான புக்கிங்களை ஓபன் செய்துள்ளது. மிக விரைவில் டெலிவரி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிஸைனை பொறுத்த வரை இந்த ஃபேஸ்லிஃப்ட்டட் மாடல் வெளிநாட்டு சந்தைகளில் விற்கப்படும் காரின் தோற்றத்தை பிரதிபலிக்கிறது. நல்ல ஷார்ப் லுக், நியூ பாடி-கலர்ட் க்ளோஸ்டு-ஆஃப் கிரில் மற்றும் நியூ டிசைன் அலாய் வீல்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் காரின் தோற்றத்தை மெருகூட்டுகின்றன.

காரின் பின்புறத்தில் செய்யப்பட்டுள்ள டிசைன் அப்டேட்களில் திருத்தப்பட்ட LED டெயில்-லேம்ப்கள் மற்றும் ரியர் பம்பர் ஆகியவை அடங்கும். 17 இன்ச் அலாய் வீல்களின் புதிய செட்டை பெற்றுள்ளது. pre-facelift வெர்ஷனில் உள்ள 8.0-இன்ச் யூனிட்டிற்கு பதில் இந்த அப்டேட்டட் மாடலின் உட்புறத்தில் புதிய 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. தற்போது ஆஸ்டரைப் போலவே இருக்கும் கிளைமேட் கன்ட்ரோல் பட்டன்களை MG நிறுவனம் திருத்தி அமைத்துள்ளது. ADAS சிஸ்டமை பொறுத்தவரை, புதிய ZS EV ஆனது ஆஸ்டரை போலவேகேமரா மற்றும் ரேடார் அமைப்பை கொண்டிருக்கிறது. இந்த காரின் மிகெபெரிய அப்டேட் முந்தைய 44.5kWh பேட்டரி பேக்கிற்கு பதில் 50.3kWh பேட்டரி பேக்கை கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 2022 MG ZS EV காரானது 461கி.மீ தூரம் செல்லும் என்று நிறுவனம் கூறி இருக்கிறது.



டாஷ்போர்டை சுற்றி புதிய கார்பன்-ஃபைபர் டிரிம்மை இந்த புதிய அப்டேட்டட் கார் பெற்றுள்ளது. பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், டிஜிட்டல் ப்ளூடூத் கீ, 6 ஏர்பேக்ஸ், ஹில் டிசென்ட் கன்ட்ரோல்,TPMS, ESC ஆகியவை மற்ற சிறப்பம்சங்களில் அடங்கும். 2022 MG ZS EV-யின் அறிமுகம் குறித்து பேசி இருக்கும் MG மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான ராஜீவ் சாபா (Rajeev Chaba), அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ZS EV-க்கு நிலவி வரும் தேவை எங்களுக்கு ஊக்கமளிக்கிறது.

Also Read : BH சீரிஸ் வாகன ரெஜிஸ்ட்ரேசன் என்றால் என்ன? - அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன?

மேலும் தற்போதைய இந்த ஆல்-நியூ ZS EV-யானது எங்கள் EV வாடிக்கையாளர்களுடன் பிராண்ட் இணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறோம். யுனைட்டட் கிங்டம், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட முக்கிய மார்க்கெட்களில் ZS EV வாகனம் உலகளாவிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனகளுக்கான தேவை பெருகி வரும் சூழலில் எங்களது தயாரிப்பு மூலம் சிறந்த அனுபவத்தை உறுதி செய்கிறோம் என்றார்.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Electric car

அடுத்த செய்தி