எம்.ஜி, டாடா பவர் கூட்டணி சார்பில் சென்னையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்!

சார்ஜிங் ஸ்டேஷன்

சென்னையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்துள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
எம்.ஜி மோட்டார் நிறுவனமும் (MG Motor India), டாட்டா பவர் நிறுவனமும் கூட்டணி அமைத்து சென்னையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷனை அமைத்துள்ளன.

சுற்றுச்சூழல் மாசு மற்றும் எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக எலக்டிரிக் வாகனங்களின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்டிரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதிலும், அதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முனைப்பு காட்டி வருகின்றன. இந்த வரிசையில் எம்ஜி மோட்டார் (MG Motor India ) மற்றும் டாடா பவர் ஆகிய இரண்டு நிறுவனங்களின் கூட்டணியில் சென்னையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இது 50 kW சூப்பர் ஃபாஸ்ட் பொது சார்ஜிங் ஸ்டேஷன் ஆகும்.

சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களில் எம்ஜி இஸட்எஸ் (MG ZS) எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை வெறும் 50 நிமிடங்களில், பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். எம்ஜி மோட்டார் மற்றும் டாடா பவர் போன்ற அதன் கூட்டணி நிறுவனங்கள் தற்போது வரை இந்தியாவின் 17 நகரங்களில் 22 சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைத்துள்ளன. டெல்லி, பெங்களூர், அகமதாபாத், நாக்பூர், மங்களூர் மற்றும் கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏற்கனவே சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிசிஎஸ் பாஸ்ட் சார்ஜிங் தரத்துடன் உள்ள அனைத்து வாகனங்களும் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறித்து பேசிய எம்.ஜி.மோட்டார் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி கவுரவ் குப்தா (Gaurav Gupta), சுற்றுசூழலுக்கு உகந்த வகையில் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் எம்.ஜி மோட்டர் நிறுவனத்தில் தயாரிப்புகளும், அடிப்படை கட்டமைப்பு மேம்பாடுகளும் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Also read... பைக் ரைடிங்கில் கலக்கும் மாற்றுத்திறனாளி அர்ச்சனா...!

வீடு, சார்ஜிங் ஸ்டேஷன் என 5 வழி சார்ஜிங் கட்டமைப்புகளை தனது வாடிக்கையாளர்களுக்கு எம்.ஜி மோட்டார் கொடுக்கும் எனக் கூறிய அவர், இந்த ஈவி சார்ஜ் நிலையங்கள் நகரத்தின் நீடித்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சென்னை சார்ஜிங் நிலையத்தை நிறுவியதன் மூலம் எம்.ஜி. மோட்டார் இந்தியாவுடனான தங்கள் பலமான தொடர்பைத் தொடர்வதில் மகிழ்ச்சியடைவதாக கவுரவ் குப்தா (Gaurav Gupta) கூறியுள்ளார். வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சார்ஜ்ஜிங் சேவையை கொடுப்பது தங்களது முக்கிய இலக்காக இருப்பதாகவும், எலெக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்களுக்கு உகந்த வகையிலான பல்வேறு புதிய அம்சங்களும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

டாடா நிறுவனத்தின் வணிக பிரிவின் தலைவர் ராஜேஷ் நாயக் (Rajesh Naik) பேசும்போது, சுற்றுச்சூழலுக்கு உகந்த, இதுபோன்ற செயல்பாடுகளை ஊக்குவிப்பதில் டாடா நிறுவனம் எப்போதும் முன்னணியில் இருப்பதாக தெரிவித்தார். சுற்றுச்சூழலை பேணிக்காக்கவும், ஆரோக்கியமான சூழலை உருவாக்கவும் டாடா நிறுவனம் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், அதன்அடிப்படையிலேயே எம்.ஜி மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் புதிய எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன் தொடங்கப்பட்டிருப்பதாகவும் ராஜேஷ் நாயக் கூறினார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: