நாட்டிலேயே முதன்முறையாக பொதுப்பயன்பாட்டுக்காக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையத்தை MG மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டம் சார்ஜ் நிறுவனங்கள் இணைந்து அமைத்துள்ளன.
இந்த முதல் சார்ஜிங் நிலையம் ஹரியானா மாநிலம் குருகிராமில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த சார்ஜிங் ஸ்டேஷன், MG மோட்டார்ஸின் முதல் எலெக்ட்ரிக் கார் வருகையை ஒட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. MG மோட்டார்ஸின் முதல் எலெக்ட்ரிக் காரான MG ZS EV வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
மேலும், தெற்கு டெல்லி, மேற்கு டெல்லி, நொய்டா ஆகிய ஊர்களிலும் இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் ஃபோர்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. 50 KW DC அதிவேக சார்ஜர்கள் இந்த நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக MG டீலர்ஷிப் ஷோரூம்களிலும் இந்த சார்ஜிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. டீலர்ஷிப் உள்ள மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
மொபைல் ஆப் மூலம் பதிவு பெற்றுள்ள MG வாகன வாடிக்கையாளர்கள் தங்களுக்கான பதிவு எண் மூலம் சார்ஜிங் நிலையங்களில் சார்ஜ் செய்துகொள்ளலாம்.
மேலும் பார்க்க: ஹூண்டாய் கார்களுக்கு ₹ 2.65 லட்சம் வரையில் ஆஃபர்..! இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.