எம்.ஜி.ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் வாகனங்களின் விலை மூன்றாம் முறையாக உயர்வு

எம்.ஜி. ஹெக்டர், ஹெக்டர் பிளஸ்

2021 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக இந்த வாகனங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

  • Share this:
ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் வாகனங்களின் விலையை எம்ஜி மோட்டார் இந்தியா மீண்டும் உயர்த்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக இந்த வாகனங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வாகனங்களின் விலையை நிறுவனம் உயர்த்தியது. அதன்படி மார்ச் மாத விலைகளுடன் ஒப்பிடுகையில், வாகனங்களின் விலை ரூ.43,000 உயர்த்தப்பட்டுள்ளன. மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவை எஸ்யூவிகளின் சந்தை விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக RushLane வெளியிட்ட தகவலின்படி, எம்.ஜி.ஹெக்டரின் ஸ்டைல் எம்.டி (Style MT) பேஸ் வேரியண்ட் இப்போது ரூ.28,000 உயர்ந்து ரூ.13.18 லட்சமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்த வாகனத்தின் விலை ரூ.12.90 லட்சமாக இருந்தது.

இதையடுத்து, சூப்பர் எம்டியின் (Super MT) விலை ரூ.28,000 அதிகரித்து ரூ.14.17 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சூப்பர் எம்டி ஹைப்ரிட்டின் (Super MT Hybrid) விலை ரூ.38,000 உயர்ந்து இப்பொது ரூ.14.78 லட்சமாக உள்ளது. ஸ்மார்ட் டி.சி.டி (Smart DCT) சிங்கிள் டோன் இன்டீரியர்களின் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் ரூ.16.8 லட்சத்திற்கே விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, ஸ்மார்ட் சி.வி.டி (Smart CVT) மாடலின் விலை ரூ.28,000 உயர்ந்து ரூ.16.85 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஷார்ப் எம்டி ஹைப்ரிட் (Sharp MT Hybrid) வேரியண்டின் விலை ரூ.33,000 உயர்ந்துள்ளது. அதன்படி இதன் விலை ரூ.17.43 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து, ஷார்ப் டி.சி.டி சிங்கிள்-டோன் இன்டீரியரின் விலை ரூ.18.39 லட்சமாகவும், ஷார்ப் டி.சி.டி டூயல்-டோன் இன்டீரியரின் விலை ரூ.18.43 லட்சமாகவும், ஸ்மார்ட் சி.வி.டி மாடலின் விலை ரூ.18.43 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. டீசல் வெரியன்ட்டை பொறுத்தவரை 2021 எம்.ஜி. ஹெக்டரின் (2021 MG Hector) விலை அதிகபட்சமாக ரூ.43,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் டீசல் வகைகளுக்கு இப்போது முறையே ரூ.14.59 லட்சம், ரூ. 15.69 லட்சம், ரூ. 17.40 லட்சம் மற்றும் ரூ.18.86 லட்சம் செலவாகும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2021 எம்ஜி ஹெக்டர் பிளஸ் 6 மற்றும் 7 சீட்டர் மாடல் விலை:

ஹெக்டர் பிளஸின் (Hector Plus) 6 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட மாடல்களின் விலைகளும் நிறுவனத்தால் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி இதன் பெட்ரோல் வேரியண்ட்டுகளின் விலை ரூ.28,000 உயர்ந்துள்ளது. அதேபோல, 6 மற்றும் 7 சீட்டர் மாடல்களின் டீசல் வேரியண்ட்டுகளுக்கு ரூ.38,000 விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலைகளின்படி, 2021 எம்ஜி ஹெக்டர் பிளஸ் 6-சீட்டர் மாடல் இப்போது ரூ.17.50 லட்சம் முதல் ரூ.19.61 லட்சம் வரை விலைக் குறியுடன் கிடைக்கிறது.

அதாவது இந்த மாடலின் பெட்ரோல் வேரியண்ட்டின் விலை ரூ.17.50 லட்சத்திலிருந்து தொடங்கி ரூ.19.18 லட்சம் வரை விற்பனைக்கு வருகிறது. அதேபோல டீசல் வேரியண்ட்டுகளின் விலை ரூ.16.38 லட்சம் முதல் ஆரம்பமாகி ரூ.19.61 லட்சம் வரை இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, 7 இருக்கைகள் கொண்ட ஸ்டைல் மற்றும் சூப்பர் ஹைப்ரிட் பெட்ரோல் வேரியண்ட்டுகளின் விலை முறையே ரூ.13.63 லட்சம் மற்றும் ரூ.15.13 லட்சம் ஆகும்.

அதேநேரத்தில், ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் செலக்ட் டீசல் மேனுவல் மாடல்களின் விலை முறையே ரூ.15.04 லட்சம், ரூ.16.14 லட்சம், ரூ.18.00 லட்சம் மற்றும் ரூ.18.81 லட்சமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுவே, தரம் வாரியான வண்ண விருப்பங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதை வாடிக்கையாளர்கள் கவனிக்க முடியும். இருப்பினும், எக்ஸ்டிரியர் டூயல்-டோன் கலர் வேரியண்ட்டின் விலை, பேஸ் வேரியண்ட் விட ரூ.20,000 அதிகரித்துள்ளது. அதேபோல, 5 இருக்கைகள் கொண்ட ஹெக்டரில் மட்டுமே கிடைக்கும் இன்டிரியர் டூயல்-டோன் வேரியண்ட்டுகளுக்கும் ரூ.5,000 கூடுதலாக செலவாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: