புதிய காரை அறிமுகம் செய்த எம்.ஜி. மோட்டார்- ரூ. 37.28 லட்சத்தில் கிளோஸ்டர் 7 சீட்டர்!

கிளோஸ்டர் காரில் டாப் வேரியண்ட் கார்கள் 2 லிட்டர் மற்றும் இரட்டை டர்போ என்ஜின் இடம்பெற்றுள்ளது.

கிளோஸ்டர் காரில் டாப் வேரியண்ட் கார்கள் 2 லிட்டர் மற்றும் இரட்டை டர்போ என்ஜின் இடம்பெற்றுள்ளது.

  • Share this:
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் 37 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயில் Gloster Savvy என்ற 7 சீட்டர் காரை இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

எம்.ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் காரின் மூலமாக இந்தியச் சந்தையில் நுழைந்தது. கடந்த ஆண்டு பீரிமியம் கார்களை அறிமுகப்படுத்தும்போது 4 வகையான வேரியண்டுகளை காட்சிப்படுத்தியது. அதில் ஸ்மார்ட், ஷார்ப், சூப்பர் ஆகிய வேரியண்டுகளுடன் சாவி கிளோஸ்டர் கார்களும் இடம்பெற்றிருந்தது. ஏ.டி.ஏ.எஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன, மிகக்குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய காராக கிளோஸ்டர் 7 சீட்டர் கார் உள்ளது.

புதிய Gloster Savvy காரைப் பொறுத்தவரை 7 சீட்டர் மற்றும் 6 சீட்டரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கிளோஸ்டர் ஷார்ப் மட்டுமே இருவிதமான சீட் தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அந்த பிராண்டுடன் Gloster Savvy-யும் இணைந்துள்ளது. முதல் வரிசையில் டிரைவருடன் ஒருவர், இரண்டாவது வரிசையில் 3 பேர் சௌகரியமாக அமர்ந்து கொள்ளலாம். கடைசியில் இரண்டு பேர் அமர்ந்து கொள்ள முடியும். நடுவில் இருக்கும் இருக்கைகளை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடிய வசதிகளும் உள்ளது கூடுதல் அம்சமாக உள்ளது.

Must Read | குறிப்பிட்ட வாகனங்களின் விலையை உயர்த்திய டாடா மோட்டார்ஸ்! செப்டம்பர் முதல் அமல்..!

Savvy-யில் டாப் வேரியண்ட் கார்கள் 2 லிட்டர் மற்றும் இரட்டை டர்போ என்ஜின் இடம்பெற்றுள்ளது. அதிகப்பட்சமாக 4000 ஆர்பிஎம்-ல் 215 பிஎச்பி மற்றும் 2400 ஆர்பிஎம்-இல் 480 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய வகையில் என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனின் உதவியுடன் என்ஜினின் ஆற்றல் காரின் நான்கு சக்கரங்களுக்கும் வழங்கப்படுகிறது. ஈக்கோ, ஆட்டோ, ஸ்போர்ட் என்கிற நான்கு ட்ரைவ் மோட்களை கொண்ட Gloster Savvy காரில் பனி, சேறு, மணல் மற்றும் பாறை என்ற பாதைகளுக்கு மோட்கள் (Modes) வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விஷயத்தில் எம்.ஜி கிளோஸ்டர் நிலை 1 ஆட்டோமேடிக் தொழில்நுட்பத்தை பெற்ற முதல் பிரீமியம் எஸ்.யூ.வி காராக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல் (ACC), இயங்கும் பாதையில் இருந்து வாகனம் விலகி செல்வதை எச்சரிக்கும் அமைப்பு (LDW), ஓட்டுனரால் பார்க்க முடியாத காரை சுற்றிய பகுதியினை கண்காணிக்கும் வசதி, ஆட்டோமேடிக் பார்க்கிங் உதவி செட்டிங்ஸ், முன்பக்கமாக வாகனம் மோதலுக்கு உள்ளாகவுள்ளதை எச்சரிக்கும் அமைப்பு, அவசரகால பிரேக்கிங், 6 காற்றுப்பைகள், டிராக்ஷன் கன்ட்ரோல், 360 கேமிரா வியூ ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் குறிப்பிடத்தகுந்தவையாக உள்ளன. Gloster Savvy-யில் பனோரமிக் சன்ரூஃப் இடம்பெற்றுள்ளது. கூடுதலாக 3-3-3 என்ற சர்வீஸையும் கொடுக்கிறது. அதன்படி, 3 வருட வாரண்டி, 3 ஆண்டுகளுக்கு சாலையோர வசதி, லேபர் ப்ரீ பிரியாடிக் சர்வீஸ் வசதிகள் நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
Published by:Archana R
First published: