புக்கிங் ஓபன் செய்யப்பட்ட 20 நிமிடங்களிலேயே தனது புதிய எஸ்யூவி ஆஸ்டரின் சுமார் 5,000 ஆர்டர்களை விற்றுவிட்டதாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது. தற்போது புக்கிங் செய்யப்பட்டுள்ள MG Astor SUV கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணி வரும் நவம்பர் 1, 2021 முதல் தொடங்க உள்ளதும். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் 5,000 யூனிட்களையும் டெலிவரி வழங்க நிறுவனம் இலக்கு நிர்ணயிக்கபட்டு உள்ளது என்று எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் கடந்த வாரம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மிட்-சைஸ்டு எஸ்யூவி பிரிவில் (mid-sized SUV segment) ரூ.9.78 லட்சம் முதல் ரூ.16.78 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் புதிய மாடல் ஆஸ்டர் வேரியன்ட் கார்களை அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்திய ஒரு வாரத்தில் ஓபன் செய்யப்பட்ட புக்கிங்கின் போது இருபதே நிமிடங்களில் 5,000 யூனிட்கள் விற்று தீர்ந்துள்ளது அந்நிறுவனத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த புக்கிங் ரூ.25,000 என்ற டோக்கன் கட்டணத்திற்கு ஓபன் செய்யப்பட்டது.
Must Read | நவம்பர் 8 முதல் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டினரை அனுமதிக்கும் அமெரிக்கா
இது குறித்து எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜீவ் சாபா (Rajeev Chaba) கூறுகையில், "வாடிக்கையாளர்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்த வரவேற்பை நினைத்து நாங்கள் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளோம். வாகன தயாரிப்பு துறையில் ஏற்பட்டு இருக்கும் உலகளாவிய சிப் நெருக்கடியை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்களை மட்டுமே எங்களால் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும். அடுத்த ஆண்டின் முதலாம் காலாண்டிற்குள் நிலைமை சீராகி தற்போதைய எண்ணிக்கையை விட அதிக யூனிட்களை தயாரிக்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.
ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், சொக்டா குஷாக் மற்றும் விடபிள்யு டைகன் போன்ற கார்களுக்கு போட்டியாக புதிய MG Astor SUV இருக்கும். எம்ஜி ஆஸ்டர் கார்கள் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் உள்ளிட்ட நான்கு வேரியன்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த கார் பெர்சனல் AI அசிஸ்டென்ட் மற்றும் அட்டானமஸ் லெவல் 2 டெக்னலாஜியுடன் வருகிறது. மேலும் இந்த கார் 2 எஞ்சின் ஆப்ஷன்களுடன் வருகிறது.
Must Read | கொரோனா தடுப்பூசி கருவுறுதலை பாதிக்குமா? அறிவியல் கூறும் உண்மை!
இதில் 220 டர்போ பெட்ரோல் எஞ்சின் 6 ஸ்பீடு ஏடி (ஆட்டோமேட்டிக்) உடன் 140 பிபிஎஸ் பவரையும், VTi டெக் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 8 ஸ்பீடு சிவிடி-யானது 110 பிஎஸ் பவரையும் வழங்குகிறது. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்த வரை 6 ஏர்பேக்ஸ்கள், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், ஹில் டிசண்ட் கண்ட்ரோல், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், 4 டிஸ்க் பிரேக், ஸ்பீடு சென்சிங் டோர் லாக், செக்யூரிட்டி அலாரம், அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், சென்சிங் வைப்பர், 7 இன்ச் எல்சிடி ஸ்கீரின் உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.