மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் - குறைந்த விலை சொகுசு செடான்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் - குறைந்த விலை சொகுசு செடான்

மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் 3 எஞ்சின் ஆப்ஷன்களோடு வந்துள்ளது.

  • Share this:
    ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் புதிய ஏ கிளாஸ் லிமோசின் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.39.90 லட்சமாகும். மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது. மெர்சிடிஸ் நிறுவனம் குறைந்த விலை சொகுசு செடான் கார் மாடலாக இதனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் 3 எஞ்சின் ஆப்ஷன்களோடு வந்துள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் ஏ200 மாடலில் உள்ள 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 163 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வழங்கும். இதனுடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

    இதே கார் மாடலில் உள்ள 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 8 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

    இதில் ஏஎம்ஜி மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 306 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. இது 0-100 கிமீ வேகத்தில் இருந்து 4.8 வினாடிகளில் 250 கிமீ வேகத்தில் செல்ல முடியும். இதன் விலை ரூ. 56.24 லட்சம் ஆகும்.



    காரின் இன்டீரியர் மிகவும் அட்டகாசமாக உள்ளது. இன்ஃபோடெயெின்மென்ட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளட்டர் ஆகியவை ஆகியவை ஒரே அமைப்பாக இரண்டு திரைகளுடன் வந்துள்ளது. 10.25 அங்குல தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் கவருகிறது. எல்இடி ஹெட்லேம்ப்கள், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல்,ஸ்டீயரிங் வீல் கன்ட்ரோல் சுவிட்சு, 7 ஏர் பேக்குகள், பின்புற பார்க்கிங் கேமரா வசதிகள் உள்ளன.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published: