ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

மெர்சிடிஸ் மேபேக் எஸ்-கிளாஸின் அறிமுக தேதி வெளியீடு... விலை எவ்வளவு தெரியுமா?

மெர்சிடிஸ் மேபேக் எஸ்-கிளாஸின் அறிமுக தேதி வெளியீடு... விலை எவ்வளவு தெரியுமா?

மெர்சிடிஸ் மேபேக் எஸ்-கிளாஸின் அறிமுக தேதி வெளியீடு

மெர்சிடிஸ் மேபேக் எஸ்-கிளாஸின் அறிமுக தேதி வெளியீடு

Mercedes Benz | மெர்சிடிஸ் பென்ஸ் அதன் 2022 மேபேக் எஸ்-கிளாஸ் காரை மார்ச் 3ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  ஆடம்பர கார்களின் அரசனான வலம் வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மேபேக் எஸ்-கிளாஸ் இந்தியாவில் களமிறக்குவதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த மாதம் SUV ஜிஎல்எஸ்600 காரை மெர்சிடிஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதிக வசதிகள் கொண்ட சொகுசு காரான இதன் விலை இதன் விலை ரூ. 2.43 கோடிகள் ஆகும்.

  இதனையடுத்து அடுத்த அதிரடியாக மேபேக் எஸ்-கிளாஸ் ரக காரை விற்பனைக்காக அறிமுகப்படுத்த உள்ளது. இது உலகின் சிறந்த கார் என பலரால் புகழப்படுகிறது, குறிப்பாக திரைப்பிரபலங்கள் மத்தியில் இந்த செய்தி ட்ரெண்டாகி வருகிறது. காரணம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ2.17 கோடிக்கு இறக்குமதி முறையில் இந்தியாவில் மேபேக் எஸ்-கிளாஸ் காரை மெர்சிடிஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆனால் அப்போது 150 கார்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது உள்ளூர் அசெம்பிளி மூலமாக ஏராளமான கார்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விலை ரூ. 1.57 கோடி என கணிக்கப்பட்டுள்ளது.

  மேபேக் எஸ்-கிளாஸ் கார் ஏற்கனவே உலகம் முழுவதும் கிடைத்துவரும் நிலையில், இதன் விற்பனையை வரும் மார்ச் மாதம் முதல் இந்தியாவில் தொடங்க மெர்சிடிஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. தனது சக போட்டியாளர்களும், ஆடம்பர் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களான பெண்ட்லி மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக, கடந்த ஆண்டு V8 மற்றும் V12 இன்ஜின்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

  Also Read : சிறிய ரக எலெக்ட்ரிக் விமானம்.. ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தில் அடுத்த அதிரடி திட்டம்

  கடந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மேபேக் எஸ்-கிளாஸ் காரை அறிமுகப்படுத்திய போது, ஐரோப்பிய வாடிக்கையாளர்களை கவருவதற்காக V8 மற்றும் V12 ஆகிய இரண்டு இன்ஜின்களுடன் விற்பனைக்கு வந்தது. S 680 4MATIC ஆனது V12 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் முதல் முறையாக ஆல்-வீல் டிரைவ் 4MATIC டிரைவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 612 குதிரைத்திறனை உற்பத்தி செய்யக்கூடியது மற்றும் மணிக்கு 100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் அடைக்கூடியது. மணிக்கு 250 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடியது.

  இந்தியாவில் 4.0 லிட்டர் வி8 டர்போ பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 550 பிஎச்பி பவரையும், 730 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும் பல லக்சூரி அம்சங்கள் மற்றும் சொகுசு வசதிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. 12.8 இன்ச் அளவுள்ள ஓஎல்இடி சென்டர் டிஸ்ப்ளே, 5 காட்சி திரைகள், 12.3 இன்ச் அளவுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, பின் பகுதிக்கான என்டர்டெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல்கள் மற்றும் பத்து விதமான மசாஜை வழங்கும் வசதி உள்ளிட்டவை மேபேக் எஸ்-கிளாஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

  மேபேக் எஸ்-கிளாஸ் ஒரு பாரம்பரிய செங்குத்தாக நிற்க வைக்கப்பட்ட முப்பரிமாண டிரிம் பட்டைகளுடன் கூடிய குரோம் பின்ஸ்ட்ரிப்களிலான மேபேக் ரேடியேட்டர் க்ரில், புதிய டிசைனிலான அலாய் வீல்கள், சி பில்லரில் மேபேக் லோகோ மற்றும் இரு பிரத்யேக நிற பூச்சு உள்ளிட்டவையும் மேபேக் எஸ்-கிளாஸ் காரை அலங்கரிக்கின்றன. மேலும் முதன் முறையாக மின்சாரம் மூலம் இயக்ககூடிய பின்புற கதவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. லெக் ரெஸ்ட்கள் மற்றும் பின்புறத்தில் மடிப்பு மேசைகள், பின்புற இருக்கை பயணிகளுக்கான மின்சார சீட் பெல்ட் நினைவூட்டல்கள் என எக்கச்சக்க சொகுசு வசதிகள் மேபேக் எஸ்-கிளாஸ் இடம்பெற்றுள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Automobile, Mercedes benz