புதிய சேவை மையத்தை இந்தியாவில் திறந்த மெர்சிடிஸ் பென்ஸ்..!

'இந்தியாவின் ஆட்டோமொபைல்ஸ் துறை சர்வதேச அளவில் ஒரு முக்கிய சந்தையாக வளர்ந்து வருகிறது'.

Web Desk | news18
Updated: July 22, 2019, 2:41 PM IST
புதிய சேவை மையத்தை இந்தியாவில் திறந்த மெர்சிடிஸ் பென்ஸ்..!
பென்ஸ் புதிய சேவை மையம். (Image source: Mercedes-Benz)
Web Desk | news18
Updated: July 22, 2019, 2:41 PM IST
மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்குத் தேவைப்படும் அத்தனை சேவைகளும் ஒரே இடத்தில் செய்து தரப்படும் வசதியைக் கொண்ட சேவை மையத்தை பெங்களூரு- மஹாராஷ்டிரா நெடுஞ்சாலையில் திறந்துள்ளது மெர்சிடிஸ்.

ட்ரினிட்டி மோட்டார்ஸின் மூன்றாவது மையமாகவும் பெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 94-வது இந்திய சேவை மையமாகவும் இந்த மையம் 52 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான இடத்தில் அமைந்துள்ளது. இதுவரை மெர்சிடிஸ் சேவை மையங்களில் இல்லாத அளவுக்கு அத்தனை தொழில்நுட்ப அப்டேட்களுடன் இந்த மையம் அமைந்துள்ளது.

இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் சிஇஓ மார்டின் ஷேவென்க் கூறுகையில், “சிறந்த தரமான வாடிக்கையாளர் சேவைக்கு விளக்கமாக விளங்குகிறது மெர்சிடிஸ் பென்ஸ். சொகுசு கார்களைப் பொறுத்தவரையில் அவற்றுக்கான தேவை அதிகப்படியாகவே இருக்கும். இந்தியாவில் சொகுசுக் கார்கள் வரிசையில் அதிக சேவை மையங்களைக் கொண்ட ஒரே நிறுவனமாக மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளது.


வாடிக்கையாளர் சேவையை எப்படியெல்லாம் மெருகேற்றலாம் என்பதைத் தொழில்நுட்பங்கள் மூலம் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். வாடிக்கையாளர் சேவைத் தரம் குறித்தான் ரேக்கிங் பட்டியலில் மெர்சிடிஸ் முதலிடத்தில் உள்ளது” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியாவின் ஆட்டோமொபைல்ஸ் துறை சர்வதேச அளவில் ஒரு முக்கிய சந்தையாக வளர்ந்து வருகிறது. இந்திய சந்தையின் செயல்பாடுகளே எங்களது வணிகத்தை நிர்ணயிக்கின்றன” என்றும் குறிப்பிட்டார்.

மேலும் பார்க்க: எதிர்பாராத வீழ்ச்சியை சந்தித்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ்..!
First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...