முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / ஒரு முறை சார்ஜ் செய்தால் 419 கிமீ ரேஞ்ச் வழங்கும் மெர்சிடிஸ்-பென்ஸின் EQB எலெக்ட்ரிக் எஸ்யூவி.!

ஒரு முறை சார்ஜ் செய்தால் 419 கிமீ ரேஞ்ச் வழங்கும் மெர்சிடிஸ்-பென்ஸின் EQB எலெக்ட்ரிக் எஸ்யூவி.!

மெர்சிடிஸ்-பென்ஸின் EQB

மெர்சிடிஸ்-பென்ஸின் EQB

Mercedes-Benz EQB Electric SUV | EQC எஸ்யூவி மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட EQS செடானை தொடர்ந்து, இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் வாகனம் EQB 7-சீட்டர் ஆகும்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் இந்த ஆண்டின் இறுதிக்குள் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரான EQB 7-சீட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த EQB ஆல்-எலெக்ட்ரிக் எஸ்யூவி-யின் ஸ்பை ஃபோட்டோக்கள் வெளிவந்துள்ளன. EQC எஸ்யூவி மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட EQS செடானை தொடர்ந்து, இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் வாகனம் EQB 7-சீட்டர் ஆகும். இது ICE-பவர்டு GLB அடிப்படையிலான இந்தியாவின் முதல் 7 சீட்டர் எலெக்ட்ரிக் வாகனமாகும்.

விரைவில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த EQB 7 சீட்டர் அதிகாரபூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, நம் தமிழகத்தின் கொடைக்கானலில் சார்ஜிங் செய்யப்பட்டு டெஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது. Mercedes-ன் மற்ற EQ மாடல்களை போலவே இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி-யானது முன் மற்றும் பின்புறத்தில் ஃபுல்-வித் LED லைட் பார்களை கொண்டுள்ளது.

டிசைன்:

Mercedes-Benz EQB பிராண்டின் புதிய டிசைனை கொண்டுள்ளது. க்ளோஸ்ட்-ஆஃப்கிரில், ஸ்வெப்ட்-பேக் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், ஃபுல்-வித் எல்இடி டிஆர்எல், மிரட்டலான தோற்றத்தில் ஃப்ரன்ட் பம்பர், ஏரோ டூயல்-டோன் அலாய் வீல்ஸ், எஸ்யூவி-யின் வலது பின்புற fender-ல் சார்ஜிங் போர்ட், ரேக்டு விண்ட்ஸ்கிரீன், சில்வர் ஸ்கிட் பிளேட்ஸ் உள்ளிட்டவற்றை EQB 7 சீட்டரின் ஸ்பை இமேஜ்கள் வெளிப்படுத்தி உள்ளன. காரின் சைடானது ரூஃப் ரெய்ல்ஸ் ,ஓஆர்விஎம்-ஸ், பிளாக்ட்-அவுட் பில்லர்ஸ் மற்றும் டிசைனர் அலாய் வீல்கள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. விரைவில் அறிமுகமாக உள்ள EQB-ன் இன்டீரியர் GLB-ஐ போலவே உள்ளது. டர்பைன் போன்ற வென்ட்களில் கோல்ட் பெயின்ட் ஸ்பிளாஷ் செய்யப்பட்டுள்ளதை தவிர விற்பனையில் உள்ள GLA-வை போன்றே இருக்கிறது.

Also Read : கார் வாங்கப்போறீங்களா..? பட்ஜெட் விலையில் வாங்கக்கூடிய 5 எஸ்யூவி பற்றிய விவரங்கள் இதோ.!

பேட்டரி & ரேஞ்ச்:

Mercedes-Benz EQB காரானது சர்வதேச அளவில் 2 அவுட்புட்களில் வெளிவருகிறது. இதில் EQB 300 பவர் ட்யூனானது 228 bhp ஆற்றலையும், EQB 350 292 bhp ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. இந்த 2 மாடல்களுமே 66.5 kWh பேட்டரியை பயன்படுத்தி ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 419 கிமீ ரேஞ்சை வழங்குகின்றன. மேற்கூறிய இரண்டில் எந்த மாடல் இங்கே வெளியிடப்படும் என்பது தெளிவாகத் தெரியாவிட்டாலும், EQB 300 தான் இங்கே அறிமுகப்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read : ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 - பிரபலமான இந்த டூரிங் பைக்கின் வரலாறு தெரியுமா.?

வெளியீட்டு தேதி மற்றும் விலை விவரங்கள் :

டிசம்பர் 2022-க்குள் Mercedes-Benz India EQB -ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ரூ.99.50 லட்சத்தில் ஏற்கனவே விற்கப்பட்டு வரும் EQC உடன் ஒப்பிடும் போது இதன் விலை ஒப்பீட்டளவில் மலிவாக இருக்கும் என தெரிகிறது. இதன் விலை ரூ. 80 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் பென்ஸ் நிறுவனம் டிசம்பர் தொடக்கத்தில் GLB-ஐ இந்தியாவிற்கு கொண்டு வரும். இதன் விலை ரூ.65 லட்சம் முதல் 70 லட்சம் வரை இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

First published:

Tags: Automobile, Mercedes benz, Suv car, Tamil News