வெள்ள நிவாரண நிதியாக 48.60 லட்சம் ரூபாய் அளித்த மெர்சிடிஸ் பென்ஸ்!

மெர்சிடிஸ் பென்ஸ் சார்பில் பல உதவி மையங்களும் வாடிக்கையாளர் சேவை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வெள்ள நிவாரண நிதியாக 48.60 லட்சம் ரூபாய் அளித்த மெர்சிடிஸ் பென்ஸ்!
மெர்சிடிஸ் பென்ஸ் (மாதிரிப்படம்)
  • News18
  • Last Updated: August 16, 2019, 12:36 PM IST
  • Share this:
இந்தியாவில் வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு நிவாரண நிதியாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 48.60 லட்சம் ரூபாய் அளித்துள்ளது.

மேற்கு மஹாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மக்களுக்கு உதவ பல முக்கிய நகரங்களில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் அரசுடன் பல தனியார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.

மெர்சிடிஸ் பென்ஸ் சார்பில் பல உதவி மையங்களும் வாடிக்கையாளர் சேவை அமையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் வாடிக்கையாளர்களுக்கு வாகன சேவை மட்டுமல்லாது பாதிப்புகளுக்கு ஏற்ப உதிரி பாகங்கள் ஜெர்மனி மற்றும் சிங்கப்பூரிலிருந்து வரவழைத்து அளிக்கிறது.


கூடுதலாக ஆன்-ரோடு சேவை, பணியாளர்கள் உதவி, வெள்ளத்தில் கார் சிக்கிக்கொண்டால் மீட்கும் கருவிகள் எனப் பலவிதமான சேவைகளையும் அளிக்கத் தயராக மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: இந்தியாவின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இலவச சர்வீஸ் - வோக்ஸ்வேகன் அறிவிப்பு!
First published: August 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்