Home /News /automobile /

Mercedes-Benz C-Class Sedan முன்பதிவு தொடங்கியது... விற்பனை எப்போது தெரியுமா.?

Mercedes-Benz C-Class Sedan முன்பதிவு தொடங்கியது... விற்பனை எப்போது தெரியுமா.?

Mercedes-Benz C-Class 2022

Mercedes-Benz C-Class 2022

Mercedes-Benz C-Class 2022 | 2022 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மாடலை மே 1ம் தேதி முதல் வெறும் 50 ஆயிரம் ரூபாயை செலுத்தி முன்பதி செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் முதற்கட்டமாக தனது வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிரத்யேக முன்பதிவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி நீங்கள் ஏற்கனவே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரீமியம் பிராண்ட் மற்றும் சொகுசு கார் உற்பத்தியில் கொடி கட்டி பறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் என்றால், ஏப்ரல் 13ம் தேதி தொடங்கிய அவர்களுக்கான முன்பதிவு ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேதிகளில் ரூ.50 ஆயிரம் செலுத்தி மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மாடலை அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பிற நபர்கள் மே 1ம் தேதி முதல் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வருங்கால தலைமுறைக்கான மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் செடான் 2022, மே 10 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அன்றிலிருந்து தனது Mercedes-Benz India ஆன்லைன் ஸ்டோர் மூலமாகவும், டீலர்கள் மூலமாகவும் விற்பனைக்கு கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

W206 சி கிளாஸ் செடான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இடையில் ஏற்பட்ட ஒமைக்ரான் பரவல் மற்றும் செமிகண்டக்டர் தட்டுப்பாடு காரணமாக விற்பனைக்கு கொண்டு வருவது தாமதமானது. இதன் வடிவமைப்பு, தோற்றம் மற்றும் அம்சங்கள் மெர்சிடிஸ் பென்ஸ் ஃபிளாக்‌ஷிப் எஸ் கிளாஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பேன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளிலேயே அதிகம் விற்பனையாகும் கார்களில் சி கிளாஸ் செடான் ஒன்றாகும், இதில் நிறுவனம் இதுவரை 37,000 யூனிட்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளது. இதன் C200 பெட்ரோல் மற்றும் C220d மற்றும் C300d டீசல் மாடல்கள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷ்களில் கிடைக்கிறது.இத்துடன் ஒன்பது கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்கள், பெட்ரோல் பவர் பிளாண்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் வழங்கப்பட உள்ளது. மெர்சிடிஸின் அறிவிப்பின் படி, புதிய செடானின் வீல்பேஸ் 25 மிமீ உயர்த்தப்பட்டு, 2,856 மிமீ வரை பெரிதாக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஒட்டுமொத்த நீளம் 65 மிமீ உயர்த்தப்பட்டுள்ளது. புதிய சி-கிளாஸின் கேபின் முதன்மையான எஸ்-கிளாஸின் உட்புறத்தை மாடலாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Also Read : இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கு குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்கள்.!

இரண்டாம் தலைமுறை MBUX இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் கூடிய பெரிய போர்ட்ரெய்ட், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், சென்டர் கன்சோலில் சில பட்டன்கள், தானியங்கி ஏசி, சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்ஸ் , முன் மற்றும் பக்கவாட்டு ஏர்பேக்குகள் ஆகியன இடம் பெற்றுள்ளன.

Also Read : டாடா கார்களுக்கு ரூ.65,000 வரை தள்ளுபடி..

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்டின் ஸ்கிவென்க் கூறுகையில், "சி-கிளாஸ் எங்களது சொகுசு செடான் வரிசையை மேலும் விரிவுபடுத்த உதவும். ஒவ்வொரு புதிய தலைமுறையுடனும் அதன் அதிக வசதி, தொழில்நுட்ப திறன் மற்றும் வளரும் வடிவமைப்பின் காரணமாக புதிய சி-கிளாஸ் இப்போது வடிவமைப்பு, மற்றும் தொழில்நுட்ப சலுகைகளில் சிறந்து விளங்குவதற்கான புதிய அளவுகோலை உருவாக்கியுள்ளது. புதிய சி கிளாஸ் மாடல் சிறப்பாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. வெளியீட்டுக்கு முன்பே எங்களின் வாடிக்கையாளர்கள் மத்தியில் புது சி கிளாஸ் மாடல் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது” என தெரிவித்துள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, India, Mercedes benz

அடுத்த செய்தி