Home /News /automobile /

நிலத்தில் மட்டுமல்ல நீரிலும் ஓட கூடிய வித்தியாசமான வாகனத்தை அறிமுகப்படுத்திய ஐரோப்பிய நிறுவனம்!

நிலத்தில் மட்டுமல்ல நீரிலும் ஓட கூடிய வித்தியாசமான வாகனத்தை அறிமுகப்படுத்திய ஐரோப்பிய நிறுவனம்!

இசட்-டிரைடன்

இசட்-டிரைடன்

இசட்-டிரைடன் (Z-Triton) என அழைக்கப்படும் வாகனம் ஒன்றை Zeltini நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளது.

மொபிலிட்டி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் பிக்கப் டிரக்குகளை மோட்டர் ஹோம்களாக மாற்றுவதை நாம் அடிக்கடி பார்க்க முடிகிறது. ஆனால் வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடான லாட்வியாவை (Latvia) சேர்ந்த மொபிலிட்டி ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜெல்டினி (Zeltini), பொழுதுபோக்கு வாகனங்களை (recreational vehicle - RV) வேறு ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்லும் யோசனையை முன்னெடுத்து உள்ளது. ஐரோப்பாவை தளமாகக் கொண்ட லாட்வியன் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜெல்டினியால் தற்போது வித்தியாசமான வாகனம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. தங்களால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த வாகனம் வீடு, படகு மற்றும் ட்ரைசைக்கிள் ஆகிய 3 அனுபவத்தையும் ஒன்றாக இணைத்து, நிலம் மற்றும் நீர் ஆகிய இரண்டிலும் பயணம் செய்வதற்கான சுதந்திரத்தை வழங்கும் என்று நிறுவனம் கூறி இருக்கிறது. இந்த புதிய வகை வாகனமான (Z-triton) மக்கள் இயற்கையுடன் ஈடுபடும் விதத்தை மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும் Zeltini நிறுவனம் கூறி உள்ளது.

இசட்-டிரைடன் (Z-Triton) என அழைக்கப்படும் வாகனம் ஒன்றை Zeltini நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஒரு வினோதமான தோற்றமுடைய பைக் ஆகும். இது ஒரு படகு மற்றும் அதே நேரத்தில் ஒரு RV ஆகும். அதாவது இந்த சிறந்த வாகனம் நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும் ஓடக்கூடியது. ஒரே நேரத்தில் சைக்கிள் மற்றும் படகு விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த புதிய தோற்றமுடைய வாகனத்தை நிலப்பரப்பில் சைக்கிளாக பயன்படுத்த பெடல்களை தவிர, நீரில் படகாகவும் பயன்படுத்த ஸ்டார்ட்அப் மோட்டார்களையும் நிறுவனம் இதில் பொருத்தியுள்ளது.

இது நகர சாலைகள், கேம்பிங் ட்ரெயில்ஸ் மற்றும் நீர்நிலைகள் வழியாக உற்சாகத்துடன் பயணம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் ஒரு எலெக்ட்ரிக் ட்ரைசைக்கிள் ஆகும். பின்புறத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட கேம்பர் உள்ளது. இது ஒரு படகாக இருக்கும், அதே நேரத்தில் வாகனத்தையே கேம்பிங்காக மாற்ற, பாதைகளை சுற்றி வர மற்றும் ஏரி பகுதிகளில் அமைதியாக பொழுதை கழிக்க வாடிகையாளர்களை அனுமதிக்கிறது. நிலம் மற்றும் நீர் ஆகியவற்றில் ஓடக்கூடிய இந்த த்ரீ இன் ஒன் வாகனம் யூஸரை தூங்குவதற்கு ஒரு அறையையும் கொண்டுள்ளது. இதன் ட்ரைசைக்கிள் மோடில் யூஸர்கள் பெடல் அல்லது மின்சாரத்தை பயன்படுத்தி வாகனத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் டூயல் 250-வாட் மின்சார மோட்டார்களை இயக்கலாம். மேலும் இந்த வாகனம் அதில் அடங்கி இருக்கும் மோட்டார் ஹோமில் 2 பெரியவர்கள் தங்குமளவிற்கு இட வசதியை பெற்றுள்ளது.

Also read... சென்னை - திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் பாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் திறப்பு

Z-Triton வாகனம் அடிப்படையில் பின்னால் ஒரு மோட்டார் ஹோம் கொண்ட பைக் என்றாலும், அதை ஒரு படகாக மாற்றுவது மிக எளிதான வேலை தான் என்று நிறுவனம் கூறி இருக்கிறது. வாகனத்தை படகாக மாற்றுவதற்கான முழு செயல்முறையும் செய்து முடிக்க 5 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும் என்றும் கூறி இருக்கிறது. அதே போல பயணம் செய்யும் போது மோட்டாருக்கான மின்சார ஆற்றல் தீர்ந்துவிடும் என்று யூஸர் கவலைப்பட தேவையில்லை. Z-Triton-னை தொடர்ந்து செலுத்துவதற்கான மாற்று வழியாக இணைக்கப்பட்ட துடுப்புகளுடன் இந்த வாகனம் வருகிறது. நிறுவனம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய சந்தைகளில் Z-Triton ஐ 16,422 டாலர் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. விரைவில் உலகம் முழுவதும் வாகனத்தை அனுப்பவும் Zeltini நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Automobile

அடுத்த செய்தி