Home /News /automobile /

Spirit of Innovation - உலகின் அதி வேகமான எலக்ட்ரிக் ஏர்பிளேனின் புதிய சாதனை!

Spirit of Innovation - உலகின் அதி வேகமான எலக்ட்ரிக் ஏர்பிளேனின் புதிய சாதனை!

உலகின் அதி வேகமான எலக்ட்ரிக் ஏர்பிளேன்

உலகின் அதி வேகமான எலக்ட்ரிக் ஏர்பிளேன்

உலக வானூர்தி மற்றும் விண்வெளிப் பதிவுகளை கட்டுப்படுத்தி சான்றளிக்கும் உலக விமான விளையாட்டு சங்கமான Fédération Aéronatique Internationale (FAI) இந்த பறக்கும் சாதனையை, அதிகாரபூர்வமான சரிபார்த்தது உறுதியளித்தது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
உலகின் அதி வேகமான எலக்ட்ரிக் ஏர்கிராஃப்ட்டாக, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முழு எலக்ட்ரிக் ஏர்கிராஃப்ட் Spirit of Innovation, மூன்று உலக சாதனைகளை செய்துள்ளது. சீமென்ஸ் ஏர்கிராஃப்ட் மூலம் இயங்கும் எக்ஸ்ட்ரா 330 LE ஏரோபாட்டிக் விமானம் 2017 ஆம் ஆண்டில் படைத்த சாதனையை விட ஸ்பிரிட் ஆஃப் இன்னோவேஷன் மணிக்கு 213.04 கிலோமீட்டர் அதிக வேகத்தில் இருந்தது என்று Rolls-Royce நிறுவன, தெரிவித்துள்ளது.

உலக சாதனையை முறியடிக்கும் முயற்சியில், விமானம் அதிகபட்ச வேகமான மணிக்கு 623 கிலோமீட்டர் வேகத்தில் பறந்தது. 7,500 ஃபோன்களை சார்ஜ் செய்ய போதுமான ஆற்றலுடன் விண்வெளியில் இதுவரை கூடிய பவர்-டேன்ஸ் உந்துவிசை பேட்டரி பேக் இந்த விமானத்தில் இருப்பதாக ரோல்-ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மூன்று வெவ்வேறு தூரங்களில் புதிய உலக சாதனைகளை படைத்ததாக கூறப்படுகிறது.

உலக வானூர்தி மற்றும் விண்வெளிப் பதிவுகளை கட்டுப்படுத்தி சான்றளிக்கும் உலக விமான விளையாட்டு சங்கமான Fédération Aéronatique Internationale (FAI) இந்த பறக்கும் சாதனையை, அதிகாரபூர்வமான சரிபார்த்தது உறுதியளித்தது.

இந்த அனைத்து எலக்ட்ரிக் விமானத்தை ஓட்டி சாதனைகளைப் புரிந்த புரிந்தவர், Phill O'Dell. இந்த சாதனைகளைப் பற்றிக் கூறுகையில், ‘எனது தொழில் வாழ்க்கையின் இது மிகவும் சிறப்பம்சமாகும். அதிக வேகத்தில் விமானத்தை இயக்கி இந்த சாதனையை செய்த போது எங்களின் ஒட்டுமொத்த அணிக்கும் ஒரு நம்பமுடியாத செயலாக இருந்தது." என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

அக்சிலரேட்டிங் தி எலக்ட்ரிஃபிகேஷன் ஆஃப் ஃபிளைட், ACCEL இன் ஒரு பகுதியான ஸ்பிரிட் ஆஃப் இன்னோவேஷன், ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட், பிசினஸ், எனர்ஜி மற்றும் இண்டஸ்ட்ரியல் ஸ்ட்ரேட்டஜி & இன்னோவேட் UK உடனான பார்த்னர்ஷிப்புடன் இணைந்து இந்த திட்டத்துக்கு நிதியளித்தது.

மேலும், இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் Boscombe Down சோதனை விமான சோதனை தளத்தில் மேற்கொண்ட ஓட்டங்களில், இந்த விமானம் 15 கிலோமீட்டருக்கு மேல் பரந்து, 532.1km/h (330 mph) வேகத்தை எட்டியது. அது மட்டுமின்றி, 60 வினாடிகளில், 3000 மீட்டர் வரை ஏறுவதற்கான அதிவேக நேரத்தையும் 202 வினாடிகளில் நிறைவேற்றி முறியடித்தது.

Also read... 3.5 லட்ச ரூபாய்க்குள் இந்தியாவின் டாப் பிரீமியம் பைக்குகள்...!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத் தலைவரான வாரென் ஈஸ்ட், “எங்களின் எலக்ட்ரிக் விமானம் வேகத்தில் உலக சாதனையை முறியடித்தது, ACCEL மற்றும் ரோல்ஸ்-ராய்ஸ் குழுவினரின் மிகச்சிறந்த சாதனை. இந்த சாதனையை செய்வதற்கு எலக்ட்ரோஃபிளைட் நிறுவனமும் துணையாக இருந்தது. தரை வழி, கடல் வழி மற்றும் வான் வழி என்று அனைத்து வகையான போக்குவரத்துகளிலும் இருக்கும் கார்பனைக் குறைக்கவும், மக்களுக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை வழங்கவும் தேவையான சேவைகளை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது எங்களின் லட்சியம்.” என்று தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Automobile

அடுத்த செய்தி