ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

உலகின் விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் 300 SLR கார் ரூ.11,000 கோடிக்கு விற்பனை!

உலகின் விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் 300 SLR கார் ரூ.11,000 கோடிக்கு விற்பனை!

மெர்சிடிஸ் பென்ஸ் 300 SLR கார்

மெர்சிடிஸ் பென்ஸ் 300 SLR கார்

Mercedes-Benz | மற்ற கார்களில் உள்ள வசதிகளை விடவும் பென்ஸ் கார்களில் பல சொகுசு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமில்லாமல், இந்த பென்ஸ் கார் பெயருக்கே ஒரு தனித்துவமான பிராண்டிங் உள்ளது.

  பெரிய பெரிய பணக்காரர்கள் எப்படியாவது விலை உயர்ந்த பென்ஸ் மாடல் கார்களை வாங்கி விட வேண்டும் என்று திட்டம் போடுவார்கள். பணக்காரர்களுக்கு இப்படியென்றால், சாதாரணமாக சம்பாதிப்பவர்களுக்கு குறைந்தபட்ச விலையுள்ள பென்ஸ் காரை வாங்கி விடவேண்டும் என்கிற கனவு இருக்கும்.

  இப்படி பலரின் விலை உயர்ந்த கனவாக இந்த பென்ஸ் கார் மாறி உள்ளதற்கு பல முக்கிய காரணிகள் உள்ளன. பென்ஸ் காரை பொறுத்தவரை அதன் செயல்திறனும், வசதியும், சிறப்பம்சங்களும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

  மற்ற கார்களில் உள்ள வசதிகளை விடவும் பென்ஸ் கார்களில் பல சொகுசு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமில்லாமல், இந்த பென்ஸ் கார் பெயருக்கே ஒரு தனித்துவமான பிராண்டிங் உள்ளது. இதனாலேயே பலரும் இந்த காரை வாங்கி விட வேண்டும் என்று கனவு வைத்துள்ளனர். பென்ஸ் கார் வைத்துள்ளவர்களை அந்த அளவிற்கு எலைட்டாக பார்ப்பார்கள். முன்பெல்லாம் பென்ஸ் கார்கள் வெளிநாடுகளில் மட்டுமே பார்க்க கூடிய ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் உள்ள பல பணக்காரர்களும் பென்ஸ் கார்களையே வாங்குகின்றனர்.

  பென்ஸ் கார்களில் பல வகைகள் உண்டு. அந்த வகையில், சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கார் என்கிற சாதனையை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பென்ஸ் 300 SLR மாடல் கார் பெற்றுள்ளது. ஜெர்மன் கார் தயாரிப்பான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பந்தய காரை $142 மில்லியனுக்கு (சுமார் ரூ. 11,000 கோடி) விற்றுள்ளதாக தகவல்கள் பரவுகின்றன. கார்ல் பென்ஸின் காப்புரிமையுடன் 1886 ஆம் ஆண்டு மோட்டார் வாகன் நிறுவனம் பெற்ற முதல் மோட்டார் காராக இந்த கார் ஒரு பொக்கிஷமாக இருந்துள்ளது.

  ALSO READ |  மஹிந்திரா நிறுவனத்தின் புதிய Scorpio விரைவில் அறிமுகம் - எஸ்யூவி கார்களில் பெரியதாக இருக்கும் என தகவல்

  இந்த தகவல்கள் உண்மை என்றால், இந்த கார் தான் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட கார் என்கிற சாதனையை படைக்கும். பந்தய காருக்காகக் குறிப்பிடப்பட்ட தொகையானது இரண்டு ஃபெராரி 250 ஜிடிஓக்கள், மீண்டும் விற்பனைக்கு வந்திருந்தால், மேலும் ஒரு டஜன் லம்போர்கினி அவென்டடோர் அல்டிமேஸ்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து ஃபெராரி 250 ஜிடிஓக்களும் ஏற்கனவே தலா 70 மில்லியன் டாலர்களுக்கு விற்றுத் தீர்ந்துவிட்டன என்பது கூடுதல் தகவல்.

  மெர்சிடிஸ் பென்ஸ் 300 SLR கார் என்பது தற்போது உலகிலேயே மிகவும் மதிப்புமிக்க கார் மாடல்களில் ஒன்றாகும், ஏனெனில் இவற்றில் இரண்டு மாடல்கள் மட்டுமே 1950-களில் உருவாக்கப்பட்டன. அதன் பிறகு மெர்சிடிஸ் இந்த தயாரிப்பில் இருந்து 1955'இல் ஓய்வு பெற்றது. அதன்பிறகு, மெர்சிடிஸ் பென்ஸ் தங்களது பிற கார்களில் கவனம் செலுத்தி வருகிறது.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Car, Mercedes benz