Home /News /automobile /

இந்தியாவில் களம் இறங்குகிறது மெக்லாரன்.. சூப்பர் கார்கள் வரிசையில் மற்றுமொரு சேர்க்கை!

இந்தியாவில் களம் இறங்குகிறது மெக்லாரன்.. சூப்பர் கார்கள் வரிசையில் மற்றுமொரு சேர்க்கை!

மெக்லாரன் கார்கள் இந்தியாவில் களம் இறங்குகிறது.

மெக்லாரன் கார்கள் இந்தியாவில் களம் இறங்குகிறது.

உலக அளவில் கார் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனம் மெக்லாரன்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் பல நிறுவனங்கள் முத்திரை பதித்துள்ளது. இந்தியாவிலும் வெளிநாட்டு மாடல்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது. சூப்பர் கார், ஸ்போர்ட்ஸ் கார், ஹைப்ரிட் கார், லக்சுரி கார் என்று பல விதமான அதி நவீன கார்களை, சொகுசு கார்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனங்களுக்கு இந்தியாவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    மெக்லாரென் ஆட்டோமோட்டிவ்  நிறுவனம் இங்கிலாந்தில் லக்சுரி கார்களை, சூப்பர் கார்களை உற்பத்தி செய்து வருகின்றது. பிரிட்டனின் ஐகானிக் கார்களின் ஒன்றான மெக்லாரென் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. நிறுவனத்தின் முதல் டீலர்ஷிப் மும்பையில் தொடங்க இருப்பதாக மெக்லாரன் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பார்ப்பதற்கு ஸ்டைலாக, அத்தனை நவீன தொழில்நுட்ப அம்சங்களும், வசதிகளுடன், பறக்காதது மட்டும்தான் குறை என்று கூறும் அளவுக்கு கண் கவரும் மாடல்களில் மெக்லாரென் நிறுவன கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இங்கிலாந்தின் சூப்பர் கார் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிறுவனம், நீண்ட நாட்களாக இந்தியாவில் கால் பதிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வந்துள்ளது. நீண்ட கால முயற்சி தற்போது கைகூடிய நிலையில், மெக்லாரென் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் சந்தையில் இணைவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    மெக்லாரென் நிறுவனம் இதுவரை 40 நாடுகளில் ஆட்டோமோட்டிவ் வணிகத்தை நிர்வகித்து வருகிறது. இந்தியா, மெக்லாரென் நிறுவனம் டீலர்ஷிப்பைத் தொடங்கும் 41வது நாடாகும். மும்பையில் முதல் டீலர்ஷிப்பைத் தொடங்க இருக்கும் நிறுவனம், அக்டோபர் மாதம் முதல் முழு மூச்சாக செயல்பட இருக்கிறது.

    வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகள், நிறுவனங்கள் மற்றும் டீலர்ஷிப்கள் தொடங்கினாலும், அதன் அனைத்து மாடல்களும் விற்பனைக்கு கிடைக்காது. ஒரு சில மாடல்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால், மெக்லாரென் நிறுவனம், தனது அனைத்து மாடல்களும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

    உலகின் பிரீமியர் மற்றும் உயர்ந்த பெர்ஃபார்மான்ஸ் உள்ள கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்று மெக்லாரென். உலகம் முழுவதும் பிரபலமான மெக்லாரென் கார் பிராண்ட் என்பது கடந்து சில வருடங்களாக மெக்லாரென் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தால் ரீப்லேஸ் செய்யப்பட்டுள்ளது.

    MCLAREN GT
    இந்தியாவில் அறிமுகமாகும்மெக்லாரன் ஜிடி கார்.


    ப்ரூஸ் மெக்லாரென் என்பவரால் உருவாக்கப்பட்ட மெக்லாரென் ஃபார்முலா 1 டீமின், திருத்தியமைக்கபப்ட்ட வடிவம் தான் மெக்லாரென் ஆட்டோமோட்டிவ் பிராண்ட். இந்த நிறுவனத்தின் கார்கள் இங்கிலாந்தில், சர்ரே, வோக்கிங்கில் உள்ள மெக்லாரென் டெக்னாலஜி மையத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    உலகின் பிரபலமான சூப்பர் கார் உற்பத்தியாளரின் சார்பாக பேசிய லலித் சௌத்ரி, “மெக்லாரென் என்பது நவீன, சொகுசு சூப்பர் காரின் அடையாளமாகும். மும்பையில் நாங்கள் மெக்லாரென் ரீடெயில் எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை திறக்க  மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். மெக்லாரென் வாடிக்கையாளர்களுக்கு, பிராண்டுடன் எளிதாக கனக்ட் ஆக முடியும், மெக்லாரென் உரிமையாளர்கள் சமூகத்தின் அங்கமாக முடியும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    மும்பை டீலர்ஷிப் தொடக்க நிகழ்ச்சியில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மெக்லாரென் GT, ஹை-பெர்ஃபார்மான்ஸ் ஹைப்ரிட்-ஆர்டுரா, 600LT, 720S கூப் மற்றும் ஸ்பைடர் 765LT ஆகிய மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Automobile, Cars

    அடுத்த செய்தி