ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

சொந்த முயற்சியில் சூரிய மின்சக்தி கார் உருவாக்கிய கணக்கு ஆசிரியர் - காஷ்மீரில் அசத்தல்

சொந்த முயற்சியில் சூரிய மின்சக்தி கார் உருவாக்கிய கணக்கு ஆசிரியர் - காஷ்மீரில் அசத்தல்

 சூரிய மின்சக்தி கார்

சூரிய மின்சக்தி கார்

solar car | காஷ்மீரைச் சேர்ந்த பிலால் அஹமது என்பவர் கணக்கு ஆசிரியராக உள்ளார். இவர் தன்னுடைய சொந்த முயற்சியில் சூரிய மின்சக்தி மூலமாக இயங்கும் கார் ஒன்றை உருவாக்கியுள்ளார்...

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஸ்ரீநகருக்கு அருகாமையில் உள்ள சனத் நகர் தான் பிலால் அஹமதுவுக்கு சொந்த ஊர் ஆகும். சுமார் 11 ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் முயற்சியின் விளைவாக இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். காரின் நாலா பக்கமும் சூரிய மின் தகடுகளை பொருத்தி, அதன் மின்சக்தியில் கார் இயங்குமாறு பிலால் அஹமது வடிவமைப்பு செய்துள்ளார்.

டிவிட்டரில் அவர் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகி வரும் நிலையில், பிலால் அஹமது பெரும் புகழ் அடைந்து வருகிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, இவரை பாராட்டி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இந்த கார் ஒருநாள் பறந்து செல்லக் கூடிய திறனையும் பெற்றுவிடும் போலத் தெரிகிறது. காரின் பக்கவாட்டில் சூரிய மின் தகடுகள் இருக்கின்றன. கார் உள்ளே சார்ஜிங் பாயிண்ட் இருக்கிறது’’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

சாமானியர்களுக்கும் பயன்படும்

சூரிய மின் சக்தியில் இயங்கும் சொகுசு கார் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது பிலால் அஹமதுவின் லட்சியமாக இருக்கிறது. அதே சமயம், சாமானியர்களுக்கும் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும் என்று கருதிய நிலையில், கடந்த 50 ஆண்டுகளில் வெளியான பல கார்களை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய முயற்சியில் அவர் வெற்றி கண்டுள்ளார்.

அமெரிக்கரை பார்த்து ஆர்வம்

அமெரிக்காவைச் சேர்ந்த ஆட்டோமொபைல் பொறியாளரும், டிஎம்சி நிறுவனத்தின் உரிமையாளருமான டெட்ராயிட்-ஐ பார்த்து ஈர்க்கப்பட்டதாக பிலால் அஹமது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மெர்சிடஸ், ஃபெராரி, பிஎம்டபிள்யூ போன்ற கார்கள் என்பது சாமானிய மக்களுக்கு வெறும் கனவு தான். பணக்கார மக்கள் மட்டுமே அதுபோன்ற கார்களை வாங்க முடியும். இந்த கண்டுபிடிப்பின் மூலமாக சாமானிய மக்களும் ஒரு வகையான சொகுசு வாழ்க்கையை உணர முடியும் என்று கருதுகிறேன்’’ என்றார் அவர்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்பெஷல் கார் ஒன்றை உருவாக்க தாம் முயற்சி செய்ததாகவும், ஆனால், நிதி பற்றாக்குறையால் அதை செய்ய முடியாமல் போனது என்றும் பிலால் அஹமது தெரிவித்தார்.

Also Read... ஹைட்ரஜன் காருக்கு ஏற்றது அல்ல... ஓலா எலெக்ட்ரிக் சிஇஓ அதிரடி கருத்து! 

குறைவான சூரிய சக்தியிலும் நிறைவான மின் உற்பத்தியை தரக் கூடிய தரமான மின் உற்பத்தி தகடுகளை அவர் பயன்படுத்தியிருக்கிறார். தமது முயற்சிகளுக்கு இதுவரையிலும் யாரும் உதவி செய்ததில்லை எனக் கூறும் பிலால் அஹமது, யாரேனும் நிதியுதவி வழங்கினால் காஷ்மீரின் எலான் மஸ்க்-காக தன்னால் உருவெடுக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Automobile