மாருதி சுஸூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி அறிவிப்பு

news18
Updated: August 23, 2018, 3:36 PM IST
மாருதி சுஸூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி அறிவிப்பு
மாருதி சுஸுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட்.
news18
Updated: August 23, 2018, 3:36 PM IST
மாருதி சுஸுகி நிறுவனம் ஆக்ஸ்ட் மாத சிறப்புச் சலுகையாக கார்களின் விலையில் 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடிகள் அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி ஆகஸ்ட் 2018-ம் ஆண்டுக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இதனால் ரூ.5000 முதல் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி விலைகளில் வாடிக்கையாளர்கள் மாருதி கார்களை வாங்க முடியும். இதில் எக்சேன்ஞ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி என பல சலுகைகளும் அடங்கும்.

வாடிக்கையாளர்கள் ஆல்டோ 800, சியாஸ் ஃபேஸ் லிஃப்ட் (பழைய மாடல்), வாகெனார் ஏ.எம்.டி, இஹ்னைஸ் என பல மாருதி நிறுவனக் கார்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.

இதில் அதிகபட்சமாக சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் (பழைய மாடல்), ரூ.30,000 கேஷ் டிஸ்கவுன்ட், ரூ.50,000 எக்சேன்ஞ் போனஸ், ரூ.10,000 கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ. 10,000 சிறப்பு கார்ப்பரேட் தள்ளுபடி என மொத்தமாக 1 லட்சம் ரூபாய் சலுகை விலையில் கிடைக்கிறது.


மாருதி கார்களின் தள்ளுபடி விலைப் பட்டியல்

மாருதியின் நெக்ஸா வகை காரான இக்னைஸ், ரூ. 30,000 கேஷ் டிஸ்கவுண்ட், ரூ. 25,000 எக்சேன்ஞ் போனஸ் மற்றும் ரூ. 3,100 கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ. 5000 வரை சிறப்பு கார்ப்பரேட் தள்ளுபடியோடு விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் ஆல்டோ கே10 ரூ.17,000 விலை தள்ளுபடியுடனும், கே 10 ஏ.எம்.டி ரூ. 22,000 விலை தள்ளுபடியுடனும் கிடைக்கிறது.
Loading...
இந்தச் சலுகையில் 2 வகையான எக்சேன்ஞ் சலுகைகள் உள்ளன. 7 வருடப் பழைய கார்களுக்கு 20,000 முதல் 30,000 ரூபாயும், 7 வருடங்களுக்கும் அதிகமான பழைய கார்களுக்கு 10,000 முதல் 25,000 ரூபாய் வரையும் எக்சேன்ஞ் சலுகைகள் உள்ளன.

இந்தச் சலுகைகள் மாருதி சுஸுகி டிசைர் மற்றும் ஸ்விஃப்ட் மாடல்களுக்கு மட்டும் பொருந்தாது. ஆனால் 2 மாடல்களுக்கும் ரூ. 10,000 வரை எக்சேன்ஞ் போனஸ் மட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: August 22, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...