• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • Maruti Suzuki: விலை உயரும் மாருதி சுசூகி கார்களின் விலை - வாடிக்கையாளர்களே முந்துங்கள்!

Maruti Suzuki: விலை உயரும் மாருதி சுசூகி கார்களின் விலை - வாடிக்கையாளர்களே முந்துங்கள்!

மாருதி சுசூகி

மாருதி சுசூகி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆட்டோ மொபைல் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
ஜூலையில் இருந்து கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆட்டோ மொபைல் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளையும், இழப்புகளையும் ஈடுகட்ட புதிய யுக்திகளை முயற்சி செய்து வருகின்றனர்.

தொழில் முடக்கத்தால், கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரவேண்டிய உதிரி பாகங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், அவற்றின் விலையும் உயர்ந்திருப்பதால், கார்களை உற்பத்தி செய்யும் செலவீனம் அதிகரித்துள்ளதாக ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் கூறியுள்ளன.

இந்த விலை அதிகரிப்பை ஈடு செய்ய, கார்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் ஏற்கனவே சூசகமாக தெரிவித்து வந்தன. இந்நிலையில், ஜூலை மாதத்தில் இருந்து மாருதி சுசூகி கார்களின் விலை உயர்த்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு கார்களின் உற்பத்தி செலவீனத்தை அதிகரித்திருப்பதாகவும், உற்பத்திக்கு தேவையான உதிரி பாகங்கள் விலை கிடுகிடுவென உயர்த்திருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

ALSO READ |  14 வேரியண்ட்டுகளில் இந்தியாவில் அறிமுகமானது ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி - விலை பட்டியல் உள்ளே!

இதனால், கார்களின் விலையை உயர்த்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும், வாடிக்கையாளர்களுக்கு சுமையாக இருக்கும் என்றாலும், தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சமாளிக்க வேறு வழியில்லை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. கார்களின் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டாலும், எவ்வளவு விலை உயர்வு? என்ற விளக்கத்தை மாருதி நிறுவனம் அறிவிக்கவில்லை. மாடல்கள் மற்றும் வேரியண்டுகளுக்கு ஏற்ப விலை உயர்வு இருக்கலாம் என யூகிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மாருதி சுசூகி நிறுவனம், கார் உற்பத்திக்கு தேவையான உதிரி பாகங்களின் விலை உயர்வு குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தது. சில வேரியண்டுகளுக்கும், மாடல்களுக்கும் ஏற்ப விலை உயர்வு இருக்கும் என்று கூறியது. அதனைத்தொடர்ந்து ஏப்ரல் மாதம் தனது நிறுவன கார்களின் விலையை அதிகரித்த மாருதி சுசூகி நிறுவனம், ஒவ்வொரு வேரியண்ட் கார்களுக்கும் குறைந்தபட்சம் 34 ஆயிரம் ரூபாயை வரை உயர்த்தியிருந்தது.

ALSO READ | இந்தியாவில் அறிமுகமானது புதிய "மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ்" வாகனம்: விலை எவ்வளவு தெரியுமா?

இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்து இரண்டு மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் மீண்டும் ஒருமுறை கார்களின் விலையை உயர்த்தப்போவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. டெல்லியில் ஆல்டோ முதல் S-CROSS கார்கள் ரூ. 2.99 லட்சத்தில் இருந்து 12.39 லட்சம் வரை (எக்ஸ் ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கிடையே, உற்பத்தியை தொடங்குவதற்குரிய பணிகளையும் மாருதி நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா காரணமாக கார்களின் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் பழைய வேகத்தில் கார்களின் உற்பத்தி இருப்பதற்கான பணிகளை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து பேசிய மாருதி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், நிறுவனத்தின் பணியாற்றும் 36,000 ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விரைவில் நிறுவனத்தின் பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: