• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • புத்தம் புதிய அம்சங்களுடன் வரும் மாருதி சுசுகி “வேகன்ஆர் ஈவி”!

புத்தம் புதிய அம்சங்களுடன் வரும் மாருதி சுசுகி “வேகன்ஆர் ஈவி”!

மாருதி சுசுகி “வேகன்ஆர் ஈவி”

மாருதி சுசுகி “வேகன்ஆர் ஈவி”

மாருதியின் வாகனங்களுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல மதிப்பு எப்போதும் உண்டு. வேகன்ஆர் ஈவியின் விற்பனை விரைவில் அதாவது 2022ல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே மாருதி சுசுகி வேகன்ஆர் ஈவி மாடல் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

அந்த ஊகங்களுக்கு உண்மையாகவே, மாருதி சுசுகி வேகன்ஆர் ஈவியின் படங்கள் வாகனத்தின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பே கசிந்தன. 2022ல் எதிர்பார்க்கப்படும் கார்களில் மாருதி சுசுகியின் ‘வேகன்ஆர் ஈவி’ மாடலும் ஒன்றாகும்.

மாருதியின் வாகனங்களுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல மதிப்பு எப்போதும் உண்டு. நம் நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்களில் ஒருவரான மாருதி சுசுகி, செலவின-செயல்திறன், மைலேஜ் அல்லது தோற்றத் துறையில் முக்கியமான இடத்தை பெற்றிருக்கிறது. மாருதி டீசல் கார்கள் தயாரிப்பதை நிறுத்தியிருந்தாலும், மின்சார வாகனங்களுக்கான வரிசை இன்னும் தொடங்கவில்லை.

இப்போது மாருதி நிறுவனம் மின்சார வாகனங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாயிருக்கிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை காரணமாக உலக வெப்பமயமாதல், சுற்றுப்புற மாசு உள்ளிட்ட பிரச்னையை இந்தியா சந்தித்து வருகிறது. இது உலக அளவிலும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

Maruti Suzuki WagonR EV
மாருதி சுசுகி “வேகன்ஆர் ஈவி”


இதனையடுத்து, மின்சார வாகனங்கள் தயாரிக்க அணைத்து முன்னணி நிறுவனங்களும் முயற்சி செய்தும் வருகின்றன. இதன்காரணமாக, நாட்டில் பயன்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் வாகனங்களைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளும் அது மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பெட்ரோல் வாகனங்களுக்கான வரியையும் உயர்த்த மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.

மின்வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு, மின்வாகன உற்பத்தியாளர்களுக்கு சில சலுகைகளையும் அறிவித்து வருகிறது. விரைவில் வெளியாகவிருக்கும் மாருதி சுசுகி வேகன்ஆர் ஈவியின் படங்கள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே கசிந்துள்ளது. இதன் மூலம் மாருதி மின்சார வாகனங்கள் தயாரிப்பதாக தெரியவந்துள்ளது.

ரேடியேட்டர் வழியாக காற்று செல்ல அனுமதிக்கும் முன் கிரில், EVன் எலும்புக்கூடு தற்போதுள்ள வேகன்ஆரை அடிப்படையாகக் கொண்டது ஆகும். பம்பரின் நடுவில் ஹெட்லைட்கள் வைக்கப்பட்டு, பம்பரின் மேல் பகுதியில் மெல்லிய கண்ணாடி பேனல்கள் வைக்கப்பட்டுள்ளன. காரின் இரு முனைகளிலிருந்தும் வரும் காற்றை மூடும், மூடுபனி விளக்குகளுடன் வருகிறது. இக்காற்றானது வென்ட் மின்சார மோட்டார்களை குளிர்விக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 



பின்புறத்தில் வேகன்ஆர் ஈவியின் டெயில்லைட்டுகள் புதிய தோற்றத்தை அளிக்கும் அளவுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதன் அசல் தோற்றத்தை போலவே உருவாக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் வைப்பரும் உள்ளது. மாருதி சுசுகி இக்னிஸால் இருக்கும் அலாய் வீல்களை தவிர, வேகன்ஆரின் தற்போதைய மாடலைப் போலவே தெரிகிறது.

வேகன்ஆர் ஈவியின் விற்பனை விரைவில் அதாவது 2022ல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் பெரும் வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பதுடன், நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளராகவும் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: