• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • 20-வது பிறந்தநாளைக் கொண்டாடும் மாருதி சுசூகி WagonR..!

20-வது பிறந்தநாளைக் கொண்டாடும் மாருதி சுசூகி WagonR..!

WagonR

WagonR

புதிய WagonR அறிமுகமான 7 மாதங்களில் 1 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆனபோதும் தொடர்ந்து அதீத வரவேற்பைப் பெற்று வரும் கார்களின் பட்டியலில் மாருதி சுசூகி WagonR உள்ளது.

    கடந்த 1999-ம் ஆண்டு அறிமுகமான WagonR 20 ஆண்டுகளாக இந்தியாவின் அதிகம் விற்பனையான கார்களின் டாப் 10 பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. மாருதி சுசூகி கார்களையே திரும்பத் திரும்ப வாங்கும் வாடிக்கையாளர்களுள் 25 சதவிகிதத்தினரின் தேர்வு WagonR ஆகவே உள்ளது. சிறந்த வடிவமைப்பு, சீட்டிங் அமைப்பு, உள் இடவசதி ஆகியன சிறப்பு அம்சங்களாக உள்ளன.

    இதுகுறித்து மாருதி சுசூகி இந்தியா நிர்வாகத் தலைவர் சஷாங் கூறுகையில், “20 ஆண்டுகளுக்கான சாதனையை WagonR உடன் இணைந்து கொண்டாடி வருகிறோம். நம்பிக்கை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி. புதிய 1.2 லிட்டர் என்ஜின் உடன் WagonR மேலும் அதிகத்திறன் கொண்டதாக மாறியுள்ளது.

    இளம் தலைமுறையினரையும் கருத்தில் கொண்டே செயல்படுகிறோம். புதிய WagonR அறிமுகமான 7 மாதங்களில் 1 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. ஜனவரி 2019 முதல் WagonR BS-VI ரகம் விற்பனையில் உள்ளன” என்றார்.

    மேலும் பார்க்க: இந்திய ஆட்டோமொபைல் துறையில் 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு- MG மோட்டார்ஸ்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: