Home /News /automobile /

பிப்ரவரி 2022 கார் டிஸ்கவுண்ட்ஸ்: ரூ.38,000 வரை சலுகை வழங்கும் மாருதி சுசுகி!

பிப்ரவரி 2022 கார் டிஸ்கவுண்ட்ஸ்: ரூ.38,000 வரை சலுகை வழங்கும் மாருதி சுசுகி!

மாருதி

மாருதி

மாருதி சுசுகி கார்களின் CNG வேரியன்ட்கள் மற்றும் எர்டிகா உள்ளிட்ட தயாரிப்புகள் தற்போது வழங்கப்படும் நன்மைகளில் இருந்து விடுபட்டுள்ளன.

விரைவில் புதிய நிதியாண்டு தொடங்கவுள்ள நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் இந்த பிப்ரவரி மாதத்தில் தனது பல கார் தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. நடப்பு மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் அதன் விற்பனைக்கு ஊக்கமளிக்கும் முயற்சியி Arena கார்களின் வரிசையில் தொடர்ச்சியான தள்ளுபடி சலுகைகள் மற்றும் பிற நன்மைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் பிப்ரவரி இறுதி வரை செல்லுபடியாகும். தவிர ஆல்டோ, ஸ்விஃப்ட், பிரெஸ்ஸா மற்றும் பிற கார்களுக்கும் கிடைக்கும்.

இருப்பினும் மாருதி சுசுகி கார்களின் CNG வேரியன்ட்கள் மற்றும் எர்டிகா உள்ளிட்ட தயாரிப்புகள் தற்போது வழங்கப்படும் நன்மைகளில் இருந்து விடுபட்டுள்ளன. கன்ஸ்யூமர் ஆஃபர்ஸ் , எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் டிஸ்கவுண்ட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் சலுகை நன்மைகள் ரூ.38,000 வரை இருக்கிறது. எனவே Arena லைன்-அப் கார்களுக்கு இந்த மாதம் வழங்கப்படும் சலுகைகளின் பட்டியல் இதோ... ஆல்டோவின் பேஸ் STD வேரியன்ட்டை தவிர்த்து, மாருதி சுசுகி காரின் அனைத்து வேரியன்ட்களிலும் ரூ.33,000 வரை பலன்களை வழங்குகிறது. இதில் ரூ.15,000 கன்ஸ்யூமர் ஆஃபர், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ஆகியவை அடங்கும். ஆல்டோவின் விலை ரூ.3.25 லட்சம் முதல் ரூ.4.95 லட்சம் வரை உள்ளது.

எஸ்-பிரஸ்ஸோ (S-Presso):

மாருதி சுசுகிகியின் இந்த மைக்ரோ-எஸ்யூவிக்கு ரூ.15,000 கேஷ் டிஸ்கவுண்ட், ரூ.3,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட், எஸ்-பிரஸ்ஸோவின் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.10,000 என மொத்தம் சலுகைகளின் மொத்த பலன்கள் ரூ.28,000 வரை இருக்கிறது.

மாருதி ஈகோ (Maruti Eeco):

Maruti Suzuki நிறுவனம் Eeco காருக்கு ரூ.10,000 கன்ஸ்யூமர் ஆஃபர், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது.

வேகன் ஆர் (Wagon R):

இந்த காருக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.10,000 மற்றும் கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் ரூ.3,000, ரூ.25,000 கன்ஸ்யூமர் ஆஃபர் என மொத்தம் ரூ.38,000 வர சலுகை பலன்கள் வழங்கப்படுகிறது. வேகன் ஆர் கார் ரூ.5.18 லட்சம் முதல் ரூ.6.58 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இந்த மாதம் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செலிரியோ (Celerio):

செலிரியோ வாங்குவோருக்கு ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.10,000 கன்ஸ்யூமர் ஆஃபர் மற்றும் ரூ.3,000 கார்ப்பரேட் போனஸ் என அதிகபட்சமாக ரூ.23,000 வரை சலுகை நன்மைகள் கிடைக்கும்.

ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் (Swift and Dzire):

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ரூ.23,000 வரையிலான நன்மைகளுடன் கிடைக்கிறது. இதில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கன்ஸ்யூமர் ஆஃபர்ஸ் தலா ரூ.10,000 மற்றும் ரூ.3,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் உள்ளிட்டவை அடங்கும். ஸ்விஃப்ட் டிசையர் மாடலுக்கும் இதே சலுகை நன்மைகள் வழங்கப்படுகிறது.

Also read... குறைந்த வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான Snow+ஐ அறிமுகப்படுத்திய Crayon Motors - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

பிரெஸ்ஸா (Brezza):

மாருதி சுசுகியின் sub 4 meter SUV, பிரெஸ்ஸாவை வாங்குபவர்கள் ரூ.18,000 வரையிலான சலுகை பலன்களை பெறுவார்கள். எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கன்ஸ்யூமர் ஆஃபர் முறையே ரூ.10,000 மற்றும் ரூ.5,000 ஆகும். மேலும் ரூ.3,000 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Maruti

அடுத்த செய்தி