• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • ஆறு கதவுகள் கொண்ட லிமோசின் போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள Maruti Suzuki Wagon R!

ஆறு கதவுகள் கொண்ட லிமோசின் போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள Maruti Suzuki Wagon R!

லிமோசின் போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள Maruti Suzuki Wagon R

லிமோசின் போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ள Maruti Suzuki Wagon R

அரிதான நிகழ்வுகளில் ஒன்றாக, வேகன் ஆர் வாகனம் அண்டை நாடான பாகிஸ்தானில் செயல்பாட்டு லிமோசினாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மாருதி சுசுகி வேகன் ஆர் அதன் ஹேட்ச்பேக் பிரிவில் தொடர்ந்து ஒரு வலுவான வாகனமாக திகழ்கிறது. மேலும் இது இந்திய சாலைகளில் காணப்படும் பொதுவான கார்களில் ஒன்றாகும். அதேபோல, ஹேட்ச்பேக்கின் முழு மின்சார பதிப்பை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யும் பணியில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே அரிதான நிகழ்வுகளில் ஒன்றாக, வேகன் ஆர் வாகனம் அண்டை நாடான பாகிஸ்தானில் செயல்பாட்டு லிமோசினாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து Gaadiwaadi.com வெளியிட்ட செய்தி அறிக்கையின்படி, புதிய தோற்றத்தில் காட்சியளிக்கும் வேகன்ஆர், பாகிஸ்தானின் லாகூரில் நகரில் கட்டமைக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட கஸ்டமைஸ்டு அலகு ஆகும். அரசியல் பதட்டங்கள் காரணமாக இந்த வாகனத்தை வடிவமைக்க தேவையான பாகங்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய முடியாது என்பதால், இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. மேலும் பாகிஸ்தானிலேயே அசெம்பிள் செய்யப்பட்ட வேகன்ஆரை சுசுகி நிறுவனம் அங்கு விற்பனை செய்து வருகிறது.

இந்த புதிய உடல் பாணியை அடைவதற்காக, எதிர்பார்த்தபடி கார் பல பெரிய மாற்றங்களுக்கு ஆளானது. வேகன் ஆர் இன் கஸ்டமைசேஷன் வேலைப்பாடுகளுக்கு காரணமானவர்கள் அல்லது இதன் பின்னணியில் உள்ள குழு பற்றி அறிக்கையில் எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், வேகன் ஆர் லிமோசின் மூன்று வரிசை இருக்கைகளைப் பெறுகிறது. நடுத்தர வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும் நாற்காலிகள் பின்புறமாக எதிர்க்கொள்வதை போல வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடைசி வரிசையில் முன்னோக்கி எதிர்கொள்ளும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், இந்த வாகனம் ஆறு செயல்பாட்டு கதவுகளைப் பெறுகிறது. அதாவது ஒவ்வொரு பயணிகளும் உள்ளே செல்லவும் வெளியேறவும் தங்களுக்கென ஒரு சொந்த கதவைப் பெறுவார்கள்.

Also read... கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு தார் ஜீப் பரிசு...!

மேலும் அறிக்கையில் உள்ள படங்களைப் பார்க்கும்போது, நடுத்தர வரிசையானது OEM முன் கதவுகளைப் போன்ற கதவுகளைப் பெறுகிறது. மூன்றாவது வரிசையின் பின்புற கதவுகள் வழக்கமான வேகன் ஆர்-ல் இருக்கும் பின்புற கதவுகளை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் வீல்பேஸும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அது தவிர, வெளிப்புற வடிவமைப்பை பொறுத்தவரை பாகிஸ்தானில் விற்கப்படும் நிலையான வேகன் ஆர் போன்ற அமைப்பை அப்படியே பிரதிபலிக்கிறது.

இந்த மாற்றியமைக்கப்பட்ட மாடல் 660 சிசி மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வேகன் ஆர் தற்போது பாகிஸ்தான் மதிப்பில் 26 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக 11.85 லட்சம் ஆகும். மேலும் இந்த வாகனம் குறித்து கிடைத்த மற்ற விவரங்களில், வேகன் ஆர் 2015 மாடல் மற்றும் ஏசி, ஏர்பேக்குகள், பவர் லாக்ஸ், பவர் விண்டோஸ், ஏபிஎஸ், ஏஎம் / எஃப்எம் ரேடியோ மற்றும் பிற ஹோஸ்ட் அம்சங்களுடன் வருகிறது என்பது தெரியவந்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: