கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் கார்களை விளம்பரப்படுத்த நடத்தப்படும் ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் பங்கேற்று அதி நவீன கார்களை அறிமுகம் செய்து வருகிறன்றன. அந்த வகையில் ஆட்டோ எக்ஸ்போ 2023-ன் 2ம் நாள் அன்று மாருதி சுசுகிகார் நிறுவனம் தனது இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அவை ஜிம்னி மற்றும் பலேனோ கிராஸ் மாடல்கள் ஆகும். Baleno Cross மாடலுக்கு Fronx எனவும் பெயரிடப்பட்டுள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது., மேலும் இது முந்தைய Nexa மாடல்களை விற்பனை செய்துவரும் டீலர்களின் கீழ் விற்பனைக்கு வருவதாக மாருதி தெரிவித்துள்ளது.
Baleno cross Fronx வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்:
நெக்சா பிராண்டிங்கில் அறிமுகமாகி இருக்கும் முதல் காம்பேக்ட் SUV கூப் மாடலாக Fronx அமைந்துள்ளது. பலேனோ கிராஸ் - ஃபிராங்க்ஸ் பிராண்டின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்ம் வடிவமைப்பைப் பொறுத்தவரை, இது ஸ்போர்ட்டியாகவும் ஸ்டைலாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புற பம்பர்கள் சற்று திடமாக அமைக்கப்பட்டுள்ளது.
இருபுறமும் பிரத்யேக ஃபாக்ஸ் ஸ்கிட் பிலேட்கள் உள்ளன. இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், புதிய ரியர் டிசைன் கொண்டிருக்கிறது. புதிய Fronx மாடலின் அம்சங்களில் சில ஏற்கனவே பலேனோ ஹேச்பேக் மாடலில் உள்ளதைப் போலவே வழங்கப்பட்டுள்ளது. அளவீடுகளை பொருத்தவரை, 4 மீட்டருக்கும் குறைவாக அதாவது 3995mm நீளமும், 1550mm உயரமும் மற்றும் 1765mm அகலமுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் உள்புறமும் பெரும்பாலான அம்சங்கள் பலேனோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
Also Read : எங்கள் மீது நம்பிக்கை வைத்த இந்திய ராணுவத்திற்கு நன்றி - மஹிந்திரா நிறுவனம் பெருமிதம்!
இதில் டேஷ்போர்டு, இருக்கை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவையும் அடங்கும். இரு மாடல்களிலும் வெவ்வேறு டெக்ஸ்ச்சர் மற்றும் சில வேறுபாடுகள் இருக்கும் என தெரிகிறது. மிதக்கும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், பிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், HUD, 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் பல அம்சங்களுடன் இது வழங்கப்பட்டுள்ளது. பாடி பேனல்கள் தவிர இந்த காரில் அப்ரைட் நோஸ் மற்றும் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப் உள்ளிட்டவை கிராண்ட் விட்டாரா மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. LED பிளாக் டெயில் விளக்குகளுடன் பூட் மூடியின் நீளம் முழுவதும் இயங்கும் LED ஸ்டிரிப்பைப் கொண்டுள்ளதாக இந்த மாடல் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Fronx மாடலில் இந்த என்ஜின் 90 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. டர்போ யூனிட் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இது 100 ஹெச்பி பவர், 147.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. மேலும் இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.2 லிட்டர் K சீரிஸ் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Car, Maruti Suzuki