விற்பனை இல்லாததால் 2 தொழிற்சாலைளில் உற்பத்தியை நிறுத்திய மாருதி சுசூகி..!

மாதிரிப்படம்

கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில் 1,68,725 வாகனங்களை மாருதி சுசூகி உற்பத்தி செய்திருந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மாருதி சுசூகி கார் உற்பத்தி நிறுவனம் விற்பனைச் சரிவின் காரணமாக தனது இரண்டு தொழிற்சாலைகளை இரண்டு நாட்களுக்குத் தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.

வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்திருப்பதால் நாட்டின் மிகப்பெரும் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி இரண்டு தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. மாருதி சுசூகியின் குருகிராம் மற்றும் மனேசர் ஆகிய இரண்டு தொழிற்சாலைகளில் செப்டம்பர் 7 மற்றும் 9-ம் தேதிகளில் உற்பத்தி நிறுத்தப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரும் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தனது உற்பத்தி சதவிகிதத்தை 33.99% ஆக குறைத்துக்கொண்டுள்ளது. கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில் 1,68,725 வாகனங்களை மாருதி சுசூகி உற்பத்தி செய்திருந்தது.

ஆனால், 2019 ஆகஸ்ட்டில் 1,11,370 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 2018 ஆகஸ்ட் மாதத்தில் ஆல்டோ, புது வேகன் ஆர், செலேரியோ, இக்னிஸ், சிஃப்ட், பலேனோ மற்றும் டிசைர் ஆகிய கார்களின் மொத்த உற்பத்தி எண்ணிக்கை 1,22,824 ஆகும். ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை சரிந்து 80,909 ஆக உள்ளது.

யூவி ரக வாகனங்களான ப்ரெஸ்ஸா, எர்டிகா, எஸ்-க்ராஸ் போன்ற கார்கள் 34.85 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. விற்பனை இல்லாத காரணத்தாலே தொடர்ந்து தனது உற்பத்தியையும் மாருதி சுசூகி குறைத்துக்கொண்டு வருகிறது.

மேலும் பார்க்க: அதே சொகுசுடன் நவீன வடிவமைப்புகளுடன் மீண்டும் வருகிறது அம்பாஸடர்!

ஆகஸ்ட் மாத கார்களின் விற்பனை பன்மடங்கு சரிவு
Published by:Rahini M
First published: