ஜிப்ஸி தயாரிப்பை மீண்டும் கையில் எடுத்தது மாருதி சுசூகி!

இந்திய ராணுவத்துக்கு ஒரே நேரத்தில் 3051 ஜிப்ஸ் வாகனங்களே டெலிவரி செய்ய வேண்டும் என்ற பெரிய ஆர்டர் மாருதி சுசூகி நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.

ஜிப்ஸி தயாரிப்பை மீண்டும் கையில் எடுத்தது மாருதி சுசூகி!
மாருதி சுசூகி ஜிப்ஸி
  • News18
  • Last Updated: June 5, 2019, 3:51 PM IST
  • Share this:
ஜிப்ஸி தயாரிப்பை நிறுத்திய மாருதி சுசூகி நிறுவனம் தற்போது மீண்டும் ஜிப்ஸி தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாருதி சுசூகி நிறுவனம் ஜிப்ஸி உற்பத்தியை நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தது. மார்ச் 2019 உடன் விற்பனையும் நின்றுவிடும் என அறிவித்திருந்த வேளையில் தற்போது ஜிப்ஸி உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

இதனால், இந்திய ராணுவத்துக்கு ஒரே நேரத்தில் 3051 ஜிப்ஸ் வாகனங்களை டெலிவரி செய்ய வேண்டும் என்ற பெரிய ஆர்டர் மாருதி சுசூகி நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் புகை வெளியேற்றத்துக்கு உள்ள விதிமுறையின் அடிப்படையிலேயே இந்த வாகனம் உற்பத்தி நிறுத்தப்பட்டது.


சட்டப்படி புகை வெளியேற்ற விதிமுறை அமலில் உள்ளதால் ஜிப்ஸி இந்திய ராணுவத்துக்காக மட்டுமே விற்க முடியும் என்றும் பொதுமக்களுக்கு ஜிப்ஸி விற்கப்போவதில்லை என்றும் மாருதி சுசூகி தெளிவுபடுத்தி உள்ளது.

மேலும் பார்க்க: ஏப்ரல் 2025 முதல் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு மட்டுமே அனுமதி!
First published: June 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்