இந்தியாவில் ஜிம்னி மினி எஸ்யூவி... நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பின்னர் மாருதி சுசூகி அதிரடி!

ஏற்றுமதி மட்டுமல்லாது உள்நாட்டு விற்பனைக்கான உற்பத்தியும் குஜராத்தில் உள்ள சுசூகி தொழிற்சாலையிலேயே நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜிம்னி மினி எஸ்யூவி... நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பின்னர் மாருதி சுசூகி அதிரடி!
சுசூகி ஜிம்னி
  • News18
  • Last Updated: August 19, 2019, 7:11 PM IST
  • Share this:
நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் ஜிம்னி மினி எஸ்யூவி காரை இந்தியாவில் மாருதி சுசூகி களம் இறக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

2019-ம் ஆண்டின் இறுதிக்குள் ஜிம்னி மினி இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. சர்வதேச அளவில் அதிக வரவேற்பைப் பெற்ற ஜிம்னி மினி இந்தியாவில் சில மாற்றங்களுடன் வெளியாகலாம். ஜிம்னி, நெக்ஸா விற்பனைத் தளம் மூலமாக விற்பனைக்கு வர வாய்ப்பு உள்ளது.

இதன் மூலம் மாருதி சுசூகியின் விதாரா ப்ரெஸ்சா மற்றும் ஜிம்னி இடையே விற்பனை வேறுபாடு கிடைக்கும் என மாருதி சுசூகி கருதுகிறதாம். விதாரா ப்ரெஸ்சா-வின் ஸ்போர்ட்டி லுக் தோற்றமே ஜிம்னி என்றும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.


முதற்கட்டமாக ஜிம்னி 4WD இந்தியாவுக்கு வராது என்றே கூறப்படுகிறது. 5 ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன், 1.5 லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் என அடிப்படை அம்சங்கள் சியஸ், எர்டிகா ஆகிய கார்களை முன்னிறுத்துகின்றன. ஏற்றுமதி மட்டுமல்லாது உள்நாட்டு விற்பனைக்கான உற்பத்தியும் குஜராத்தில் உள்ள சுசூகி தொழிற்சாலையிலேயே நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: அப்போலோ மருத்துவமனை வளாகங்களில் இனி எலெக்ட்ரிக் சார்ஜிங் வசதி - மத்திய அரசு ஒப்பந்தம்

70 ஆண்டுகள் பழமையான கார் கண்காட்சி!
First published: August 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்