நடப்பாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் அதன் பல மாடல்களின் ஃபேஸ் லிஃப்ட் வெர்ஷன்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் நாட்டில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டங்களையும் மாருதி சுசுகி கொண்டிருக்கலாம் என தெரிகிறது. மாருதி சுசுகி தனது பிரபலமான ஹேட்ச்பேக் காராக இருக்கும் மாருதி ஸ்விஃப்ட்டின் ஸ்போர்ட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் மாருதி சுசுகியின் புதிய மாடலான ஸ்விஃப்ட் ஸ்போர்ட் (Suzuki Swift Sport) கார், மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவால் (ARAI) டெஸ்ட்டிங் செய்யப்பட்டு உள்ளது. மாருதி சுசுகியின் Swift Sport கார் இந்திய சாலைகளில் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது தொடர்பான போட்டோ சோஷியல் மீடியாக்களில் லீக் ஆகி இருக்கிறது.
பின்புற விண்ட்ஸ்கிரீனில் ‘On test by ARAI என்ற ஸ்டிக்கருடன் புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் சாலைகளில் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. Maruti Suzuki Swift Sport இந்தியாவில் டெஸ்ட்டிங் செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. ஸ்விஃப்ட் மாடலின் ஸ்போர்ட்டியர் வெர்ஷனான Swift Sport வெளிநாடுகளில் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால், அது Hyundai i20N Line போன்றவற்றுடன் போட்டியிடும்.
தற்போது லீக்காகி இருக்கும் போட்டோவை கொண்டு இதன் டிசைன் பற்றி பார்க்கும் போது, வழக்கமான ஸ்விஃப்ட் காருடன் ஒப்பிடுகையில் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் சில தனித்து தோற்றத்தைக் கொண்டுள்ளது தெரிகிறது. ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரின் உளவு பார்க்கப்பட்ட போட்டோக்கள், இந்த கார் இரட்டை எக்ஸாஸ்ட்களுடன் (dual exhausts) புதிய பம்பர்களை கொண்டிருப்பதைக் காட்டுகின்றன.
மேலும் புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரானது ரூஃப்-மவுண்டட் ஸ்பாய்லர், டூயல் டோன்ட் நியூ அலாய் வீல்ஸ், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் பல அம்சங்களை பெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது. மாருதி ஸ்விஃப்ட்டின் ஸ்போர்ட் பேட்ஜ்-ஐ பின்புறத்தில் காணலாம். இதனிடையே வெளிநாடுகளில் விற்கப்படும் சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பெறுகிறது.
ALSO READ | Datsun Brand உற்பத்தியை நிறுத்திய நிசான்... அதிரடி முடிவிற்கு காரணம் என்ன.?
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 127 பிஎச்பி பவரையும், 235 என்எம் பீக் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் கார் மணிக்கு 210 கி.மீ வேகத்தை அடைய உதவும். 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. அப்டேட்டட் மாடல் சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் வலுவான சேஸிஸ் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்விஃப்ட் ஸ்போர்ட்டின் டயர் ப்ரொஃபைல் வழக்கமான வெர்ஷனை விட வித்தியாசமாக இருக்கும்.
சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஹை பீம் அசிஸ்ட், மோதலை தவிர்க்கும் collision mitigation பிரேக்கிங் உள்ளிட்டவற்றை கொண்ட ADAS அம்சங்கள் அடக்கம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Maruti Suzuki