லிட்டருக்கு 32 கி.மீ மைலேஜ் தரும் புதிய மாருதி சுசூகி Swift ஹைப்ரிட் அறிமுகம்..!

அதிக திறன், குறைவான மாசு வெளிப்பாடு என ஒரு எலெக்ட்ரிக் வாகனத்துக்கு உண்டான திறனைக் கொண்டுள்ளது புதிய Swift ஹைப்ரிட்.

லிட்டருக்கு 32 கி.மீ மைலேஜ் தரும் புதிய மாருதி சுசூகி Swift ஹைப்ரிட் அறிமுகம்..!
மாருதி சுசூகி Swift ஹைப்ரிட்
  • News18
  • Last Updated: February 10, 2020, 4:27 PM IST
  • Share this:
ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் மாருதி சுசூகியின் புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பத்தினாலான Swift காரை அறிமுகம் செய்துள்ளது.

கூடுதலாக எவ்வித சிரமங்கள் நிறைந்த கட்டமைப்புகளும் இன்றி எளிதாக மாசு வெளிப்பாட்டைக் குறைக்கவும் எரிபொருள் திறனை அதிகரிக்கவும் பெரிதும் உதவும் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை Swift காரில் பயன்படுத்தியுள்ளது மாருதி சுசூகி. அதிக திறன், குறைவான மாசு வெளிப்பாடு என ஒரு எலெக்ட்ரிக் வாகனத்துக்கு உண்டான திறனைக் கொண்டுள்ளது புதிய Swift ஹைப்ரிட்.

தற்போதைய சூழலில் ஜப்பான் சந்தைகளில் மட்டும் புதிய Swift ஹைப்ரிட் விற்பனைக் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து ஹைப்ரிட் தொழில்நுட்பத்திலான வாகனங்களை அறிமுகம் செய்வோம் என மாருதி நிறுவனம் உறுதி அளித்துள்ளது.


‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வாகனங்களை பட்ஜெட் விலையில் உயர் தர தொழில்நுட்பங்கள் உடன் தர உழைத்து வருகிறோம் என அறிவித்துள்ளது மாருதி சுசூகி.

மேலும் பார்க்க: 4,600 கோடி ரூபாய்க்கு சொகுசு படகு வாங்கியுள்ள பில் கேட்ஸ்... கிறுகிறுக்க வைக்கும் வசதிகள்!
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்