• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • மாருதி நிறுவனத்தின் கார் விற்பனை அமோகம் - வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஸ்விப்ட்!

மாருதி நிறுவனத்தின் கார் விற்பனை அமோகம் - வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஸ்விப்ட்!

மாருதி சுசுகி

மாருதி சுசுகி

மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விப்ட் கார் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் வாகனமாக இருப்பது என்பது கடந்த மாதம் விற்பனை மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடந்த பிப்ரவரி மாதத்தில் கார் விற்பனை 11.8 விழுக்காடு உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாருதி சுசூகி நிறுவனத்தின் ஸ்விப்ட் கார் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் வாகனமாக இருப்பது என்பது கடந்த மாதம் விற்பனை மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் 18, 696 யூனிட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 20,264 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுதோறும் ஸ்விப்ட் கார்களின் விற்பனை 8 விழுக்காடு அளவுக்கு அதிகமான விற்பனையாகி வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாடல் கார்கள் அறிமுகப்படுத்தியதிலிருந்து தற்போது வரை இந்தியாவில் மட்டும் 23 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளதாக மாருதி நிறுவனம் கூறியுள்ளது.

ஸ்விப்ட்டுக்கு அடுத்தபடியாக முறையே பலினோ 20,070 யூனிட்டுகளும், வேகன் ஆர் மாடல் கார்கள் 18,728 கார்களும் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பலினோ மாடல் கார்களின் விற்பனை 21 விழுக்காடு வளர்ச்சியை பெற்றுள்ளன. வேகன் ஆர் கார்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18,235 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 18,728 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒட்டு மொத்த விற்பனையில், பிப்ரவரி மாதம் வரை 1,64,469 கார்களை விற்பனை மாருதி நிறுவனம் செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 11.8 சதவீதம் அதிகமாகும்.

ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 1,47,110 கார்களையே விற்பனை செய்ததாக மாருதி சுஸுகி நிறுவனம் கூறியிருந்தது. மாருதி சுஸுகியின் மினி கார்களின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.9 சதவீதம் குறைந்துள்ளது. மாருதியின் மினி கார்களான ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ கடந்த மாதத்தில் 23,959 யூனிட்களும், அதேநேரம் 2020 பிப்ரவரி மாதத்தில் 27,499 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மாருதி ஸ்விப்ட் கார்களில் ஹேட்ச்பேக் 3 தலைமுறை அப்கிரேடுகளை கொடுக்கப்பட்டு, அவை அனைத்தும் இந்தியன் கார் ஆப் த இயர் அவார்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. அண்மையில் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய அப்கிரேடுடன் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி ஸ்விப்ட், அடுத்த தலைமுறை கே சீரிஸ் டியூயல் ஜெட் வி.வி.டி. என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டருக்கு 23.20 கி.மீ. தூரம் ஓடியுள்ளது.

Also read... எம்.ஜி, டாடா பவர் கூட்டணி சார்பில் சென்னையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்!

இரட்டை வண்ணங்களைக் கொண்ட ஹேட்ச்பேக் மாடலாகவும் புதிய அப்கிரேடு ஸ்விப்ட் வந்துள்ளது. இதில் குரூயிஸ் கண்ட்ரோல், ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி, ரியர் வியூ மிரரை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, 10.67 செ.மீ. டி.எப்.டி. திரை ஆகியவற்றுடன் 17.78 செ.மீ. அளவிலான இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு அம்சமாக இதில் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்., ஹில் ஹோல்ட் ஆகியன உள்ளன. முன்புறம் இரண்டு ஏர் பேக்குகள் உள்ளன. சீட் பெல்ட் ரிமைண்டர், ஐசோபிக்ஸ் வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதி, ரியர்வியூ கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதில் 5 வேரியன்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: