ஸ்விப்ட் கார்களை திரும்பப் பெறுகிறது மாருதி நிறுவனம்!

news18
Updated: July 25, 2018, 7:28 PM IST
ஸ்விப்ட் கார்களை திரும்பப் பெறுகிறது மாருதி நிறுவனம்!
மாருதி டிசைர்
news18
Updated: July 25, 2018, 7:28 PM IST
புதிய ஸ்விப்ட் மற்றும் டிசைர் கார்களை திரும்பப்பெறுவதாக மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய கார்களில் உற்பத்தி கோளாறு காரணமாக, வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் ஏதேனும் பாகங்கள் பழுதடைந்திருந்தால் கார்களை திரும்பப் பெற்று பழுதடைந்த பாகங்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இலவசமாக சரி செய்து கொடுப்பது 2012ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ஏர்பேக்கில் இருக்கும் கோளாறுகளை சரி செய்வதற்காக 1,279 கார்களை திரும்பப்பெறுவதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது. மே 7-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட 1,279 புதிய கார்களை மாருதி நிறுவனம் திரும்பப் பெறுகிறது. இதில் மொத்தம் 566 ஸ்விப்டுகள் மற்றும் 713 டிசைர் கார்கள் அடங்கும்.

இதுகுறித்து மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் கார்களின் பாகத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தால் அந்த கார்களை திரும்பப்பெறுதல் உலக அளவில் நடந்து வருகிறது. ஜூலை 25ம் தேதி முதல் சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர்களுக்கு மாருதி நிறுவனம் முறையாக தொடர்பு கொண்டு, பழுது ஏற்பட்டுள்ள பாகத்தை இலவசமாக மாற்றித் தரும்” என்று தெரிவித்துள்ளது.

இந்த வருடம் மே மாதம் 52,686 புதிய ஸ்விப்ட் மற்றும் பலேனோ கார்களில் பிரேக் வாக்யூம் ஹோசில் பழுது ஏற்பட்டிருக்கிறதா என்பதை சோதனை செய்வதற்கு மாருதி நிறுவனம் இலவச சர்வீஸ் முகாம்கள் நடத்தியது. பின்பு பிரேக் வாக்கியும் ஹோஸ் பாதுகாப்பு சமந்தப்பட்ட பாகம் இல்லையென்பதால் கார்களை திரும்பப் பெறுவதில்லை என மாருதி நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
First published: July 25, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...